தென்றல் 33

3.8K 215 154
                                    

"அப்போ எதுக்கு ஷாக்சி என்ன நீ அன்னைக்கு லவ் பண்றேன்னு சொன்ன" என்று கேட்க ஷாக்சி என்ன கூறுவது என்று புரியாமல் முழித்தாள்.

"அன்னைக்கு என்ன சொன்ன ஷாக்சி, இனிமே நீங்களே உங்கள தரக்குறைவா பேசினா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுன்னு. அப்போ உனக்கு நான் நடக்க முடியாம இருந்தப்போ என் மேல பரிதாபப்பட்டு காதல் வந்திருக்கு. இப்போ நான் நல்லானதும் உனக்கு என்மேல இருந்த பரிதாப காதல் காணாம போயிடிச்சி, அப்படித்தானே?" என்று கேட்க ஷாக்சியோ தான் மித்ரனிடம் வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்தாள்.

"ஆமா மித்ரன் நீங்க எப்படி வேணா நினைச்சிக்கோங்க. என்னால ஒரு சாதாரன குடும்ப வாழ்க்கைய வாழமுடியாது. அன்னைக்க்கு நான் உங்க கிட்ட அப்படி சொல்ல காரணம் நிஜமாவே உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாதுன்னுதான். நீங்க அத தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க" என்று கூறிய வேலை திவ்யா  வந்து கதவைத்தட்ட சரியாக இருந்தது.

"ஓய் கல்யான மாப்பிள்ளை அன்ட் பொண்ணே வெளில வாங்கப்பா. உங்களுக்காக எல்லோரும் வெயிட்டிங்க்" என்று கூற மித்ரன் ஷாக்சியிடம்

"ஷாக்சி நம்ம விசயத்த அப்புறமா பேசிக்கலாம். முதல்ல நம்ம வெளில போகலாம் " என்று கூற ஷாக்சியும் சரி என தலை அசைத்தாள்.

இருவரும் குளித்து முடித்து வெளியில் வர திவ்யாவை கண்ட ஷாக்சியின் முகத்தில் ஒரு குழப்பமும் பூரிப்பையும் கண்ட திவ்யா அவள் அருகில் வந்து குறும்புடன்

"என்னடி கல்யான பொண்ணே முகமெல்லாம் வெக்கத்துல சிவந்து போய் இருக்கு, என்ன விசேசம்? " என்று கேட்க ஷாக்சியோ அவளை முறைக்க

"லூசு மாதிரி பேசாத திவ்யா. ஆமா நைட் ஏன் நீ எனக்கு டேப்லட்ட கொடுக்கல? " என்று கேட்க திவ்யாவுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது ஷாக்சி தினமும் சாப்பிடும் தூக்க மாத்திரையை நேற்றைய இரவு கொடுக்க மறந்ததை. என்ன நடந்ததோ என்ற பயத்தில் இருக்க ஷாக்சியோ 

"லூசு ஏன்டி கொடுக்கல்ல" என்று கேட்க 

"இல்ல ஷாக்சி நிஜமாவே எனக்கு மறந்திடிச்சிடா" என்று கூற ஷாக்சி எதுவும் கூறாமல் மனதுக்குள்

நகம் கொண்ட தென்றல்Where stories live. Discover now