தென்றல் 35

3.8K 235 155
                                    

" அர்ஜுன் எனக்கு திவ்யாவ மீட் பண்ணனும் " என்று கூற, அர்ஜுனோ

"எதுக்கு மேகா திவ்யாவ இப்போ மீட் பண்ணனும்னு சொல்ர. அப்புறம் உன் முகம் வேற சரியா இல்லயே" என்று கேட்டவனை மேகாவோ உலர்ந்த புன்னகையுடன்

"இல்ல அர்ஜுன் அவ கிட்ட பேசுரப்போ எல்லோரும் தெரிஞ்சிக்கலாம் எதுக்குன்னு" என்று கூறினாள். இடையில் ஜானவியோ

"இப்ப அவ எதுக்கு மேகா. அவ சாப்டர்தான் முடிஞ்சி போச்சே. மறுபடி எதுக்கு முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்" என்று கேட்டவளை மேகாவோ

"ஜானவி தயவு செய்து நீ இதுல தலை இடாத. உன்னால ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினைகள்தான் இப்போ இந்த அளவுக்கு வந்திருக்கு" என்று கூற ஜானவி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

மித்ரன் வீட்டில் ......

"ஷாக்சி இன்னைக்கு உன்ன டாக்டர் கிட்ட அப்பாய்ன்மண்ட் வாங்கிருக்கு.4 மணிக்கு கிளம்பனும்" என்று கூற அவளோ சரி என தலையசைத்தாள்.

ஊரில் இப்போதுதான் பிரபல்யம் பெற்று வரும் ஒரு மனோதத்துவ டாக்டரை சந்திக்க ஷாக்சி மற்றும் மித்ரன் இருவரும் சென்றனர். க்ளினிக்கை அடைந்தவர்கள் வழமையான க்ளினிக்களுக்கும் ஒரு மனோதத்துவ டாக்டர் ஒருவரின் க்ளினிக்கிற்கும் பாரிய வித்தியாசம் காணப்பட்டது. ஆங்காங்கே பிசிறி பிசிறாக கலை நயத்துடன் பூசப்பட்டிருந்த வர்ண அலங்காரங்கள் , மிகவும் அழகாகவும் கலை நயத்துடனும் இருந்த தூன் வேலைப்பாடுகள், மிக நேரத்தியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பல தரப்பட்ட புத்தகங்கள் என அந்த இடமே ஒரு கலை நயத்துடன் காணப்பட்டது. தாங்கள் வந்தது ஒரு க்ளினிக்கிற்கா அல்லது கலை நயத்துடன் அமைக்கப்பட்ட ஒரு லைப்ரரிக்கா என்று நினைக்கும் அளவுக்கு அந்த இடமே ஒரு ரம்மியமாக இருந்தது.

இவர்களின் முறை வர உள்ளே இருவரும் சென்றனர். அங்கு டாக்டராக ஒரு இள வயது பெண்ணே இருக்க இவர்கள் இருவருக்கும் பெரும் ஆச்சரியமாகா இருந்தது. இவர்களை உட்கார வைத்து டாக்டர் பேசிக்கொண்டிருக்க அந்த டாக்டரின் திறமை மித்ரனுக்கு புரிய ஆரம்பித்தது. மித்ரனே ஷாக்சிக்கு நடந்த விடயங்களை கூற ஆரம்பிக்க டாக்டரோ மித்ரனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்து ஷாக்சியை பேச செய்தார். ஷாக்சியின் வாயாலேயே அவளுக்கு நடந்த கஷ்டங்களை வெளியில் கூற வைப்பதே மனோதத்துவத்துல் ஒரு வகை டிரீட்மண்ட்தான்.

நகம் கொண்ட தென்றல்Where stories live. Discover now