கற்பனை 26

1K 121 95
                                    


அவள் கூறியதை கேட்டவன் ஒரு கணம் திகைத்து 

"நந்தினி என்ன சொல்ல  வர்ற இப்போ"என்று கேட்க நந்தினி தெளிவாக

"நான் இதுல ரொம்ப தெளிவா இருக்கேன் கதிர்.நாம சேர்ந்து வாழலாம் ஆனா இன்னும் 10 வருசத்துக்கு பிறகு நம்ம வாழ்க்கைய திரும்பி பார்த்தோம்னா நம்ம வாழ்க்கைல ஒரு காற்புள்ளி,ஆச்சரியக்குறி ஏன் முற்றுப்புள்ளி கூட இருக்காது.ஆனா கேள்விக்குறி மட்டும் இருக்கும்.இப்படி நாம சேர்ந்து வாழனுமா இல்லை நாம பிரிஞ்சி நம்மளோட மீதியா இருக்குற வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாற்றுவோமா? எனக்கு எதுன்னாலும் ஓக்கேதான்" என்று கூற கதிருக்கு இப்போது தலை சுற்றியது.வீட்டில் எப்போதும் அமைதியாக இருக்கும் அவள் மணிரத்னம் படத்தில்‌ வருவது போல இப்படி ஒரு கருத்தை கூறுவாள் என்று சிறிதும் எண்ணவில்லை.

"நந்தினி நீ சொல்ரது எல்லாமே சரிதான் ,ஆனா நாம பிரிஞ்சிட்டோம்னா உங்க அம்மா அப்பா மனசு எவ்வளவு பாதிக்கப்படும்னு நீ யோசிக்கலையா?" என்று கேட்க சிறிது யோசித்தவள்

"நீங்க சொல்றது  கரக்ட்தான் கதிர், ஆனா அவங்க கவலைப்படுவாங்கன்னு நம்ம லைப்ப கெடுத்துக்க முடியாதுல்ல.மத்தவங்களுக்காக எதுக்கு நாம வாழனும்.அப்புறம் என்னோட அம்மா அப்பாதானே நான் பார்த்துக்கிறேன்"என்று கூற கதிருக்கு கூற எதுவுமில்லாமல் போனது.

ஒரு வாரம் கழித்து நந்தினியின் தாய் தந்தையரின் வீட்டிற்கு சென்ற அவர்கள் தங்களின் முடிவு பற்றி கூற தன் மகளை சிறிதும் கடிந்து கொள்ளாத அவளின் தந்தை முதன் முதலாக பளாரென்று அறைந்தவர்

"என்ன நந்தினி உன் வாழ்க்கைய டிசைட் பண்ற முடிவ நாங்க உனக்கு குடுத்திருந்தது என்னமோ உண்மைதான்.ஆனா அத வெச்சி நீ இவ்வளவு அட்வாண்டேஜ் எடுத்துக்குவேன்னு நான் கனவுலயும் நினைக்கவில்லை. என் பொண்ணு என்னைக்குமே சரியான முடிவ மட்டுமே எடுப்பான்னு நினைச்சிருந்தேன். ஆனா முதன் முதலா என்னோட கணிப்பு தவறுன்னு நீ நினைக்க வெச்சிட்ட"என்று அவளின் முகம் பார்க்காமல் கோவத்தில் அவ்விடத்தை விட்டு செல்ல இவ்வளவு நாளும் தன் தாய் தந்தையரால் சிறியதொரு மனக்கஷ்டத்தையும் காணாதவள் இன்று தன் தந்தை இப்படி கூறியதும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவள் வாழ்வில் முதன் முதலாக தன் தந்தையால் கண் கலங்கியவள் தான் எடுத்த முடிவு தவறோ என்று நினைக்க எப்போதும் தனக்கு ஆதரவாக பேசும் தன் தந்தையே தன்னை புரிந்து கொள்ளாத போது பண்பாடு ,கலாச்சாரம் என்று பேசும் தன் தாய் எப்படியும் தன் முடிவை புரிந்துகொள்ளமாட்டார் என்று நினைத்தவள் தன் தாயிடம் பேசாமல் வெளியில் செல்ல முயல அவளின் தாய்

ஆகாஷனாWhere stories live. Discover now