சுவாசம் 1

36 3 0
                                    

இது ரொம்ப குட்டி கதை தான் நண்பர்களே... வாசித்து பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...

சுவாசம் 1

அழகு அழகு என்று அழகுகளே வியந்து பார்க்கும் அளவு அழகு கொண்ட, காணும் தூரம் வரை மின்னி மின்னி அடங்கும் பொன் மஞ்சள் நிற மனற்பரப்பு பறந்து விரிந்திருந்த கடற்கரை அது.

தன் மஞ்சளழகியை அள்ளியணைக்கும் பேரார்வம் கொண்டு ஓடிவரும் நீலக்கடலும், கடலினதும் கரையினதும் காதல் சீண்டல் தாளாது ஆதவன் அவனும் செஞ்சிவப்பு நிறத்தில் வெட்கம் கொண்டு
தன் முகம் மறைக்கும் நேரம். தென்றல் காற்று சுகமாய் தாலாட்டிச்சென்றது அங்கிருந்தவர்களை.

கடலை விட்டு சற்று தூரம் தள்ளி தன் நீளக்கால்கள் இரண்டிலும் தன் முட்டிக்கைகள் வைத்து தன் விரல் நகங்கள் பின்னிப் பிணைதிருக்க தூரம் தெரிந்த கடல் மாதாவை வெறித்துப் பார்த்திருந்தான் அவன்.

அவனுக்கு சத்தியமாய் புரியவில்லை மங்கை அவள் மனதை எப்படி மாற்றிடுவதென்பது. அவளிடம் எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்துவிட்டான். அவள் முடிவு மட்டும் முடியவே முடியாது என்பதாக தான் இருக்கிறது.

"பிடிவாதத்திற்கு பிறந்தவள்"

அவன் மொழிந்தது கோவமாய் சொல்வதை போல் இருந்தாலும் அவன் இதழ்கள் சின்னதாய் சிரிப்பையும் தாங்கிக்கொண்டு இருந்தது.

தன் மோன நிலையில் தன் மனம் போன போக்கில் தன்னவள் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவன், தன் நவீன மொடல் கையடக்க தொலைபேசி அதிர்ந்து அதிர்ந்து மீள தன் யோசனையில் இருந்து மீண்டான்.

போக்கெட்டிலிருந்த கையடக்கதொலை பேசியை எடுத்து பார்க்க அதில் ஒரு குட்டிப்பெண் தலை சரித்து சிரித்துக்கொண்டு இருக்க அதை கண்டு தன்னை அறியாது அவன் முகம் கனிவை தத்தெடுத்துக்கொண்டது.

காற்றெங்கும் உன் சுவாசம் Where stories live. Discover now