சுவாசம் 3

17 1 0
                                    

"கொஞ்சம் நாள் டைம் கொடுங்கம்மா... எனக்கென்ன நாற்பது வயதா ஆகிறது... இப்போ தானே அம்மா இருபத்தி ஏழு வயசாகுது... இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே அம்மா... "
என்றான் அவன்.

"ஆமாடா இப்படி தான் இரண்டு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்க. நான் ஒருத்தி உன்கிட்ட வந்து கேட்டேன் பாரு. இன்னைக்கு மட்டும் மாற்றியா சொல்ல போற.. போடா "
ஆதங்கத்தோடு வெளிவந்தது அவர் குரல்.

அவன் குடித்த பால் டம்ளரை எடுத்துக்கொண்டு எழுந்து செல்ல போனவரை எழவிடாமல் தடுத்தவன் அவர் மடியிலே தலை வைத்து படுத்துக்கொண்டு அவர் கையை எடுத்து தன் தலையில் வைத்து கோதுமாறு செய்கையில் சொல்ல மகன் ஆசைப்படி தலையை கோதியவர்.

"இதையெல்லாம் பன்னதான்டா ஒருத்திய கூட்டிட்டு வா என்கிறேன்"
என்க
"அதல்லாம் பேஷா கூட்டிட்டு வரலாம் இப்போ நீ பண்ணு"
என்றவன் தாயின் தலை கோதலின் சுகத்தில் தன்னையறியாமல் தூங்கிப்போனான்.

இது முடிந்து கொஞ்சம் நாள் போயிருக்கும். நாளைக்கு முக்கியமான டீல் முடித்து கொடுக்க வேண்டியிருக்க எம். டி யின் வேண்டுகோளின் படி எல்லா துறைசார் ஊழியர்களும் டீலை முடிப்பதற்காக அதிக நேரம் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அனைத்து வேலைகளும் முடிந்து ஆபீஸ் விட்டு வெளியேற ஒன்பது மணியாயிற்று. உண்மையில் ஒவ்வொரு ஊழியர் முகத்திலும் களைப்பு தாண்டவமாட கட்டிலைக் காட்டினால் போதும் உடல் அசதி தீர தூங்கி எழும்ப என்றிருந்தார்கள்.

மணி ஒன்பதாகையால் பஸ் போக்குவரத்தும் குறைந்திருக்க அவரவர் அவரவர் வாகனத்தில் என்றும் லிப்ட் கேட்டும் என்று வீடுபோய்க்கொண்டு இருந்தனர்.

ப்ரியாவுக்கென்று வண்டி எதுவும் இல்லை என்பதாலும், பிறரிடம் அவ்வளவு நெருக்கமாய் பழகுபவள் இல்லை என்பதாலும் பஸ்ஸிற்கு காத்திருந்து போகவேண்டிய நிலைமை அவளுக்கு. அவள் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்கவும் ஆரவ் ஆபிசில் இருந்து வெளியேறவும் நேரம் சரியாக இருந்தது. அவளின் கெட்ட நேரமோ என்னமோ ஆரவ்வின் பார்வை இந்தப்பக்கம் திரும்பும் முன் அவன் கண் காணும் தூரமிருந்து மறைந்திருந்தாள அவள்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 18, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

காற்றெங்கும் உன் சுவாசம் Where stories live. Discover now