சுவாசம் 2

12 3 0
                                    

சுவாசம் 2

முழுக்கை ஜாக்கெட்டும் இளஞ்சிவப்பு நிற பிளான் சேலையும் அணிந்து ஹீல்ஸ் இல்லாத செருப்பு போட்டு தன் தோளில் ஹாண்ட் பாக்கை சுமந்தபடி கம்பீரமாய் நுழைந்தாள் அவள்.

அனுபவம் அவளுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியிருந்தது. அதில் ஒன்று இந்த கம்பீரம். இரும்பை அடிக்க அடிக்க உறுதியாவது போல். அவளுக்கு காலம் கற்றுத்தந்த பாடங்கள் அவளை அசையா பெண்ணாய் மாற்றியிருந்தது.

அந்த ஏழடுக்கு கட்டிடத்தில் ஐந்தாவது தளத்தில் அவள் வேலையகம் அமைந்திருந்தது. முன்னாள் கடந்தவர்கள் சிலரின் வாழ்த்துக்கு சிநேக சிரிப்பும் சிலரிடம் மென்மையான தலையாட்டலுமென்று சென்றவள் மின்தூக்கியினுள் ஏறிக்கொள்ள மூடிக் கொள்ளப்பார்த்த கதவுகளை தடுத்து நிறுத்தியது ஒரு கை. உள்ளே வந்தவனை கண்டு அவள் முகம் ஒரு நொடி ஆச்சர்யம் காட்டி அடுத்த நிமிடம் கோபத்தில் சிவக்க தொடங்கியது.

அவள் இறங்க வேண்டிய தளத்தை அம் மின் தூக்கி அடைய அவள் இறங்கும் முன்

" ஒரு நிமிடம் ரதி "

என்ற அந்த குரலின் சொந்தக்காரனை திரும்பி என்ன என்பது போல் பார்க்க

"விஷ் யூ ஹாப்பி பர்த்டே ரதி "

என்றான் அவன். அவன் கையில் பூங்கொத்தோன்று காத்துக்கிடந்தது என்னை ஏற்றுக்கொள் என்று சொல்வது போல.

அவனை உணர்ச்சியற்று பார்த்தவள் திரும்பி தன் கேபின் நோக்கி நடக்க தொடங்கினாள். என்ன தோன்றியதோ திரும்பி அவனை பார்த்து

"என்னை இனி ரதி என்று கூப்பிடாதீர்கள்.... அடுத்தவர் என்னை அப்படி கூப்பிடுவது எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் மறுபடி மறுபடி அதே பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அது என் கார்த்திக் மட்டும் கூப்பிட்டது அவனுக்கு மட்டுமானது "

என்று சற்று நிறுத்தி மீண்டும்

" நானும் நீங்களும் ஒரே அலுவலகத்தில் வேளை செய்பவர்களாக இருக்கலாம் ஆனால் அடிக்கடி இந்த தளத்தில் வந்து நிற்கின்ற வேலையும் வேண்டாம். எனக்கு தெரியும் இந்த அலுவலகத்தில் வேளை செய்பவருக்கு எங்கு வேண்டும் என்றாலும் போக முடியும் ஆனால் தேவை இல்லாமல்,  வேளை இல்லாமல் வந்து நிற்காதீர்கள். அடிக்கடி இப்படி அடுத்தவருக்கு நாம் காட்சிப்பொருளாக தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதே போல் என் வீட்டிட்கும். எப்படி என் பெயர் கார்த்திக்கு மட்டும் சொந்தமோ அதே போல நானும் எப்பவும் என் கார்த்திக்கு மட்டுமே சொந்தம்"

காற்றெங்கும் உன் சுவாசம் Where stories live. Discover now