ஒளி 11

423 26 12
                                    

மித்ரன் தான் எவ்வாறு திருமணம் செய்து கொண்டேன் என்ற கதையை தனக்கு தெரிந்த வரையில் கூறினான். ஆனால் ஹரி நிதானமாக யோசித்து தன் அண்ணனுக்கு ஏதோ ஒரு இடத்தில் சூழ்ச்சி நடந்துள்ளது என்பதை தெரியப் படுத்தினான். அப்போதுதான் மித்ரன் அதை யோசிக்க ஆரம்பித்தான். தான் முதலில் கோபத்தில் மட்டுமே யோசித்து கொண்டு இருந்தவன் எதையும் தெளிவாக யோசிக்க வில்லை ஆனால் தன்னுடைய தம்பி நடந்த அனைத்தையும் கேட்ட போது அவனுக்கு ஒவ்வொரு விஷயமாக சொல்லும் போதுதான் ஏதோ ஒரு இடத்தில் தன்னை வேண்டுமென்றே சிக்க வைத்திருக்கிறார்கள் என்ற விஷயம் புரிந்தது. ஆனால் இதில் விஷ்ணுவும் துணை என்று அவன் நினைத்தது தான் விதியின் செயல். அதன் பிறகு அந்த விஷயத்தை முடித்துவிட்டு தன் தம்பியின் காதல் கதையை கேட்க ஆரம்பித்தான்.

ஹரியும் தன்னுடைய கதையை கூற ஆரம்பித்தான் முதல் முதலில் அவன் மகியை பார்த்தது அவள் கல்லூரி வந்த முதல் நாள் பார்ப்பதற்கு கிராமத்து அழகு தேவதை என்று தெளிவாக தெரிந்தாலும் அவள் முகத்தில் ஒரு சோகம் இருந்தது. அது ஊரை விட்டு பிரிந்து வந்து இருப்பதற்கான காரணம் போல என்று எண்ணிக் கொண்டான் ஹரி. ஆனால் ஏனோ அவளறியாமல் அவன் நெஞ்சத்தில் புகுந்து விட்டாள் மகிழினி.

அன்று கல்லூரியில் அனைவரும் முதலாமாண்டு மாணவ மாணவிகளை ராகிங் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் ஹரி மற்றும் அவனுடைய நண்பர்கள் அதில் சிக்கல் இல்லை அதற்கு முக்கிய காரணம் ஹரியின் அண்ணன் இருவரும் அந்த கல்லூரியில் தான் படித்தனர். அவர்கள் படிக்கும் காலங்களில் மிகவும் பிரபலமாக இருந்த காரணத்தினால் இதனை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை அதே போல் இவனுடைய பார்வை மகிழினி பக்கம் இருப்பதைப் பார்த்தவர்கள் அவளையும் சீண்ட நினைக்கவில்லை.

ஹரி மனதில் அவளுடைய சோகத்தை போக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் எவ்வாறு அவளிடம் சென்று பேசுவது என்று முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். அதேபோல் அவனுடைய இன்னொரு மனதில் கண்டிப்பாக இங்கு அவளுக்கு தோழிகள் கிடைத்தால் நிச்சயமாக அவள் மகிழ்ச்சியாக மாறிவிடுவாள் என்று எண்ணிக்கொண்டான்.

விழியின் ஒளியானவள் (முடிவுற்றது)Where stories live. Discover now