ஒளி 13

455 26 13
                                    

மித்ரன் ஹரி மற்றும் விஷ்வா இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு டிடெக்டிவ் வர சொல்லி இருந்த இடத்திற்கு கிளம்பினான். அங்கு அவன் வந்து சேர்ந்தபோது அவனுக்காகவே அந்த டிடக்டிவ் காத்துக்கொண்டு இருந்தார்.

அதை பார்த்த மித்ரன் அவரிடம் "சாரி கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு மன்னிச்சிடுங்க" என்று தன்னுடைய மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தான். அதற்கு அவர் "பரவாயில்லை மித்ரன் நானும் வந்து பத்து நிமிடம் தான் ஆகிறது அதனால் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறினார்.

மித்ரன் அவரைப் பார்த்து சிரித்து விட்டு "நீங்கள் சென்ற விஷயம் நல்லபடியாக முடிந்ததா நான் கேட்ட தகவல்கள் அனைத்தும் கண்டுபிடித்து விட்டீர்களா" என்று கேட்டான்.

அந்தத் டிடெக்டிவ் மித்ரன் முகத்தை பார்த்துவிட்டு "மித்ரன் நீங்க எதுக்காக அந்த பொண்ண பற்றிய விபரங்கள் கேட்டீங்க என்று எனக்கு முதலில் தெரியாது ஆனால் அந்த பெண்ணை பற்றி விசாரிக்கும் போதுதான் அனைத்தும் தெரிந்தது உங்களிடம் ஒரு உண்மையை கூற நினைக்கிறேன். அது என்னவென்றால் உங்களுக்கும் அந்த பெண்ணிற்கும் நடந்த திருமணம் திட்டமிட்டு செய்யப்பட்டது ஆனால் இதற்கும் அந்த பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என்று கூறி மித்ரன் முகம் பார்த்தார்.

மித்ரனுக்கு ஏற்கனவே இந்தத் திருமணம் திட்டமிட்டு செய்யப்பட்டது என்பது புரிந்து இருந்தது. ஆனால் இதில் விஷ்ணு சம்பந்தப்பட்ட இருப்பாள் என்றுதான் அவன் இவ்வளவு நாளும் நினைத்து இருந்தான் ஆனால் அந்த டிடெக்டிவ் நடந்த எதற்கும் விஷ்ணுவிற்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறுவது எனக்கு குழப்பமாக இருந்தது அதே குழப்பத்துடன் அவர் முகத்தைப் பார்த்தான்.

அந்த டிடெக்டிவ் அவன் குழப்பமான முகத்தை பார்த்து சிரித்து விட்டு "உங்களுடைய மனைவி பெயர் விஷ்ணு பிரியா வெங்கடேசன் மற்றும் ஆண்டாள் இருவருக்கும் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம். ஆனால் பிறந்தது முதல் அவளுக்கு கண் பார்வை கிடையாது" என்று கூறி மித்ரன் முகம் பார்த்தார் விஷ்ணுவிற்கு கண் தெரியாது என்ற விஷயம் தெரிந்தவுடன் மித்ரன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

விழியின் ஒளியானவள் (முடிவுற்றது)Where stories live. Discover now