போர்க்கள பதவி நியமனம்

47 2 0
                                    

2.கடைக்குட்டிக்கான‌ கள நியமனம்

சக்கரவர்த்தி கண்கள் தனது கடைக் குட்டி ஐ கூர்ந்து கவனித்தவாறே சில நொடிகள் சிந்தனை செய்தன
இளவரசன் கோரிக்கை பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்று தான்
இதற்கு சபையோர் கருத்து என்னவோ என்று தன்னை நோக்கி வந்த அருள் மொழி இன் அம்பை சபையோர் நோக்கி திருப்பி விட்டார் சோழராசன்.

அணிருத்த பிரம்மராயர் தனது கருத்தை முதலில் வெளியிட்டார்.சோழ பரம்பரை வீரத்தை உலகு அரியமே , நமது இளம் புலி தனது பராக்கிரமத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். நமது ஈழ படையை முழுவதும் அவர் வசம் தராமல் படை பிரிவுகளில் ஒன்றை அவர் தலைமை தாங்கினால் அவர் வீரம் இவ்வுலகிற்கு வேளிப்படும் என்பது அடியேனின் விருப்பம் என்று கூறி அமர்ந்தார் சோழன் சபை முதல் மந்திரி.

அதை தொடர்ந்து சபையின் சிற்றரசர்கள் அனைவரும் அதனை வழிமொழிந்தனர்

அருள் மொழி இன் எழில் கொஞ்சும் வதனம் சந்தோசத்தில் சிவந்தது

அரசர் அதை கவனிக்க தவறவில்லை

இறுதியில் அரசர் எழுந்து நின்றார் .சபையோர் ஒவ்வொருவரையும் தன் மனக்கண்ணில் எடை போட்டு
சில நொடிகளில் பேச துவங்கினார்

உங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் இந்த அரசன் நன்றி ‌தெறிவிக்கிறேன்.
இங்கு உள்ள ஒவ்வொருவரும் மாவீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் தலைமை என்பது ஒற்றை இலக்கத்தை சார்ந்தது.

இச்சமயத்தில் படையை நடத்திச் சென்று வெல்ல அனுபவம் வாய்ந்த போர் களத்தில் நிகரற்ற பழுவூர் வேந்தன் பெரிய பழுவேட்டரையர் ஐ நான் தேர்வு செய்கிறேன்

அவர் தற்சமயம் நிர்வாகிக்கும் தன,தான்ய,வரி வசூலிக்கும் உரிமையை அவரது சிறந்த சீடனும் , அவரது இளவலும் ஆன சிறிய பழுவேட்டரையர் நிர்வாகிப்பார்.

இதை கேட்ட சபையோர் புத்துயிர் பெற்றனர்.

புலி கொடி வெல்க.... கரிகாலன் வழி வந்த சுந்தர மகா ராசன் வாழ்க வாழ்க என்ற வாழ்த்தொலி வின்னை முட்டின.

சுந்தரர் அருள் மொழி ஐ நோக்கி இளவரசன் எண்ணம் உன்னதமானது‌.அவர் சிறு பிள்ளை ஆயினும் அவரது கடமை இன்றியமையாதது.

இளவரசன் அருள் மொழி பழையரை படைவீடு சார்ந்த வீரர்களுக்கு தலைமை ஏற்று நடத்தட்டும்.

ஆயினும் இளவரசன் என்ற பெயரில் படைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்கும் உரிமையை தர இயலாது

ஒரு துணை படை தளபதிக்கு உரிய அதிகாரங்கள் மட்டுமே ஈழத்தில் அவர் க்கு அளிக்கப்படும் என்று கூறி ஆசனத்தில் அமர்ந்தார் மன்னவன்

இதை கேட்ட அவையோர் உவகை கொன்டனர் . இளவரசன் புகழ் ஓங்குக என்ற வாழ்த்துக்கள் வந்தன

ஓர் இளவரசனின் கதைWhere stories live. Discover now