பயண ஆயத்தம்

31 1 0
                                    

தனது முதல் போர் பங்களிப்புக்கான அனுமதி கிடைத்த நாளில் இருந்து இளவரசர் அருள்மொழிவர்மன் தனது போர் ஆயத்த பணிகளில் மூழ்கினார். தனக்கான கவசங்கள் , வாள் போன்ற பொருட்களை தேர்ந்தெடுக்கவும் , தான் விரும்பிய வடிவில் செந்து கொள்ளவும் ஆர்வமாக ஆயுத உற்பத்தி சாலையில் நேரத்தை செலவிட்டார்.
மறுபுறம் தன் தந்தை மரண செய்தியில் வாடிய கொடும்பாளூர் இளவரசி தன் தந்தைக்காக போரிட செல்லும் அந்த இளம் வாலிபனை காண ஆர்வமானல், தனக்கு நிழலாக நின்று பேணிவரும் தோழியின் சகோதரர் என்று தனி மதிப்பு அவர் மீது கொண்டாள் .இதனை கவனத்தில் கொண்ட சோழ குல மகள் குந்தவை தன் சகோதரன் இலங்கை செல்லும் நாளன்று நீ அவனை காணலாம் . அவனுக்கு ஆர்த்தி எடுக்க அரச மகளிர் செல்லும் இடத்தில் நீயும் இருப்பாய் என வாக்குறுதி அளித்தாள்.

அந்த நாளும் வந்தது

போர் வீரர்கள் தம் குடும்பங்களுக்கு விடை அளித்து சோழ மரக்களங்களில் ஏறி கொண்டு இருந்தனர்

சேவகர்கள் உணவு பொருட்களையும் ஆயுதங்களையும் கப்பல்களில் ஏற்ற படிக்கப்பட்டு நடந்த கொண்டு இருந்தது.

இளவரசன் அருள் மொழி தந்தை இடம் ஆசி பெற்று கோட்டை வெளியே வந்தார்

அரச மகளிர் அனைவரும் தங்கள் கைகளில் ஆரத்தி ஏந்தி இளவரசரையும் மற்ற உப தளபதிகளையும் எதிர்பார்த்து நின்றனர்

அந்த வினாடியில்
அருள் மொழி ஐ கண்ட கொடும்பாளூர் இளவரசி மூர்ச்சை ஆகினால்
அது பயமோ , தன் தந்தையின் நினைவில் வருத்தமுற்று விழுந்தாளோ அதை சோழ நாடு காக்கும் ஈசனே அறிவார்

அதில் பலர் பல விதமான கருத்துக்கள் கூறினர்
ஒன்று மட்டும் நிச்சயம் அந்த நிகழ்ச்சியால் வானதியின் கள்ளம் கபடமற்ற முகம் அருள் மொழியின் மனதில் பதிந்தது
அவள் நினைவை நெஞ்சில் தாங்கியபடியே இளவரசன் தலைமை மரக்களத்தில் ஏறினார்

ஓர் இளவரசனின் கதைWhere stories live. Discover now