கடலிலே ஓர் போர்

20 2 0
                                    

கப்பல்  தன் பயணத்தை தொடங்கி சில நாட்கள் ஆனது.சோழ குலத்தின் செல்லப் புதல்வர் மனம் ஈர்த்த வேளிர் குல மகளை எண்ணி கொண்டு இருந்தார் . பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே மரக் களம் செலுத்தும் திறனை சக மாலுமிகளிடம் கற்கவும் ஆரம்பித்து இருந்தார்.கப்பலில் இலங்கையில் உள்ள வீரர்களுக்கு உணவு பொருட்களும் மருத்துவ மூலிகைகளும் வைத்தியர்கள் சிலர் இருந்தனர். இளவரசர்க்கு பாதுகாப்பு அளிக்கும் அவர்க்கான மெய்க்காப்பாளர் படை சிலர் மட்டுமே இருந்தனர் மேலும் ஆறு கப்பல் மாலுமிகள் உடன் இருந்தனர் .

அது ஒரு மதிய வேளை கதிரவன் தன் முழு திறன் கொண்டு வெப்பத்தை அளித்து வந்தது.
திடீரென தூரத்தில் ஒரு பெரிய கப்பல் தங்கள் திசை நோக்கி நகர்ந்து கொண்டே வருகிறது என கப்பல் மாலுமி தலைவர் செங்கடல் வேலன் கவனித்தார்
உடனே அதன் கொடியை ஆராய்ந்து கலக்கும் கொன்டு
தம்மை நாடி வருவது நமது நலன் விரும்பிகள் இல்லை என இளவரசனிடம் சொல்ல அதனை குறிக்க எதிர் கப்பல் கொடி ஐ சுட்டி காட்டினார். கப்பல் நெருங்கி வர வர சோழ கப்பலில் வீரர்கள் கப்பலின் மேல் தளத்தில் ஆயத்தம் ஆனார்கள் . போர் ஞானம் இல்லாதோர் கப்பல் பாதுகாப்பு அறைகளில் சேர்ந்தனர்.மெய்காவல் வீரர்கள் கூறியும் இளவரசன் அருள் மொழி பாதுகாப்பு அறைகளில் தங்க மறுத்து போர் கவசம் தரித்தார் . எதிர் கப்பல் நெருங்கி வர வர அதன் மக்களை இளவரசர் கண்டார்.அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு நிறங்கள், உயரங்களில் பல்வேறு நாட்டவர்களாக தோற்றமளித்தனர்.அந்த நொடியில் தான் இன்று கடல் கொள்ளையர்களை எதிர் கொள்ளும் நிலை உணர்ந்து தனது இரத்தினங்கள் பதித்த பிரியமான வாளை கையில் ஏந்தி ஹர ஹர மகாதேவா என உறக்க‌ முழங்கினார்

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 11, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

ஓர் இளவரசனின் கதைWhere stories live. Discover now