வசந்த மாளிகை

31 1 0
                                    

3.வசந்த மாளிகை
மந்திர ஆலோசனை சபை முடிந்த பிறகு வரி வசூலிக்கும் கணக்குகளை சோதித்துவிட்டு இறவு வேலையில் அந்தப் புறத்தை அடைந்தார் சுந்தர சோழ சக்கரவர்த்தி
அதற்கு உள்ளாக அருள் மொழி வர்மனின் சபை பேச்சின் தகவல் சோழ அதிகார வர்க்கத்தினர் அனைவருக்கும் தீயென பரவியது.
மகாராணி கலியாணி தேவியார்,சோழ குளத்தின் ராஜாமாதா பெரிய பிராட்டி மற்றும் இளைய பிராட்டி குந்தவை ஆகியோர் சுந்தரரை காண அந்தப்புரத்தில் காத்திருந்தனர்
சோழ அந்தப்புரம் மனிதனால் உருவாக்கப்பட்டது என கண்ணால் பார்க்கும் எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
சோழ முக்கிய மகளிர் வசிக்கும் பகுதி என்பதால் பல அடுக்கு பாதுகாப்பு உடன் இருந்தது
பல வண்ண ஓவியங்களாலும்  சின்னஞ் சிறிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அதன் ஒவ்வொரு சுவர்களும் நிரப்பப்பட்டிருந்தன
ராமாயணம் மகாபாரதம் புராண ஓவியங்கள் ,சேர சோழ பாண்டிய போர் களத்தின் காட்சிகள் அடுத்தடுத்து தீட்ட பட்டிருந்தன
அவற்றின் ஊடாக நிறங்களுக்கு ஏற்றார்போல முத்து,பவள, நவ ரத்தினங்களும் பாதிக்கப்பட்டிருந்தன.
இவற்றை காண , இவற்றில் உள்ள வேலை நுணுக்கங்களை அறிந்து கொள்ள நம் ஒவ்வொருவருக்கும் சக்கரவர்த்தி இராவணன் ஐ போல
பத்து தலைகள் தேவைப்படும் என கூறினால் அது மிகையல்ல.

ஓர் இளவரசனின் கதைWhere stories live. Discover now