*7*

112 3 10
                                    

நாட்கள் நிமிடங்களாக மாறி அதன் போக்கிற்கு வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. நாங்கள் முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடத்திற்கு அடி எடுத்து வைத்தோம்.பாடத்திட்டங்கள் இன்னும் கடினமாக்கப்பட்டு இருந்தன.அது ஒரு பக்கம் இருந்தாலும் நானும் மயூவும் எங்களின் கல்லூரி வாழ்க்கையை இரசித்துக்கொண்டு தான் இருந்தோம்.

இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்க ஒரு நாள் மைக்ரோபியல் ஜெனிடிக்ஸ் பாடத்தைப் பற்றி எங்கள் துறைத் தலைவரே விரிவுரையளித்துக்கொண்டிருந்தார்.

நான் உன்னிப்பாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.ஆனால் என்னை ஒழுங்காக பாடத்தைக் கவனிக்கவிடாமல் குசுகுசுவென்று என்னிடம் பேசிக்கொண்டே இருந்தாள் மயூ. "ஏய் கொஞ்சம் சும்மா இருடி… இந்தம்மா நடத்துறது ஏற்கனவே விளங்கலை… நீ வேற அதையும் கவனிக்க விடாம டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்கி… கொஞ்ச நேரம் அமைதியா இருந்து தொலையேன்" என கடுகடுத்தபடி கூறினேன் நான்.

நான் அவளிடம் பேசுவதை மட்டும் கண்டுவிட்ட என் துறைத்தலைவர் கோபத்துடன்"வான்மதி….ஸ்டாப் இட்... என்ன நடக்குது அங்க… எவ்வளவு முக்கியமான டாபிக்க பத்தி லெக்சர் எடுத்துட்டு இருக்கேன்… நீ என்னடான்னா நீயும் கவனிக்காம கூட இருக்குறவங்களையும் கவனிக்க விடாம பண்ணிட்டு இருக்க...உனக்கு இந்த டாபிக் அவ்வளவு ஈஸியா இருக்கா… கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்… என்னோட அடுத்த க்ளாஸ்க்கு நீ வரனும்னா இந்த டாபிக்ல ஒரு அசைன்மென்ட் ரெடி பண்ணி எடுத்துட்டு வரனும்...இல்லைன்னா என் க்ளாஸ்க்கே  வராத… "என சம்பந்தமே இல்லாமல் என் மேல் காய்ந்தார் என் துறைத்தலைவர்.

"இல்ல மேம் நான் எதுவும் பண்ணலை மேம்… சாரி மேம்"என்ற என்னை 

"ஷட் அப் வான்மதி… டூ வாட் ஐ சே "என்பதுடன் நிறுத்திக்கொண்டார்.

அட அவ பேசினதுக்கு இந்தம்மா என்னை வெளிய போக சொல்றாங்களே… பத்ததாதுக்கு இந்த புரியாத டாபிக்ல அசைன்மென்ட் வேறயா…என நினைத்த எனக்கு மயூவின் மேல் அடக்கமாட்டாமல் கோபம் வந்தது.

என் பார்வை உனக்கும் ரகசியமா ?Where stories live. Discover now