*4*

328 16 17
                                    

காலைச்சூரியனின் மரகத மஞ்சள் ஒளி என் மீது படர நான் மெது மெதுவாக கண்களைத் திறந்தேன் . அமர்ந்த வாக்கிலேயே தூங்கி விட்டிருக்கிறேன் போல . மெதுவாக எழுந்துஎங்கள் அறையில் உள்ள பெரிய சாளரத்தின் திரைச்சீலையை விலக்கினேன் சிலுசிலுவென்ற வாடைக்காற்று என் மேனியில் மோதியது . பரம சுகமாக இருந்தது .  கோத்தகிரியின் காலை வேலையின்  ரம்மியமான  காட்சிகள் சாளரத்தின் வழியே கண்டு ரசிக்கையில்  இதமாக இருந்தது . நேற்றைய நிகழ்வுகள் யாவும் ஏதோ சொப்பனம் கண்டது போல இருந்தது . அவற்றையெல்லாம் ஹரியிடம் சொல்லிவிட மனது உந்தினாலும் புகுந்த வீட்டிற்கு வந்த இரண்டாம் நாளே கணவரின் சொந்தங்களை கணவரிடமே குறை கூறுவதற்கு எனக்கு சங்கடமாக இருந்தது . என் சந்தேகம் முழுக்க முழுக்க நந்திதாவின் மேல் இருந்தாலும்  இவையெல்லாம் செய்தது அவள்தான் என்பதை நான் எதை வைத்து நிரூபிப்பது .  அவளின் ஆட்டம் எதுவரைதான் போகிறது என்று பார்த்துவிடலாம் என்ற புதுத் தைரியம் கொடுத்த தெம்புடன் குளியலறைக்குச் சென்றேன் . 

நான் குளித்து முடித்து வெளிவரும் சமயம் ஹரி அவரின் மொபைலில் இன்ஸ்ட்டாகிராமை பக்கத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார் . நான் வந்ததை உணர்ந்தவுடன் அதை விடுத்து என் முகத்தை ஆராய ஆரம்பித்துவிட்டார். 

“ என்ன வானு ? என்ன ஆச்சு …? ஏன் உன் முகம் இவ்வளவு வாடிப்போய் இருக்கு ? அழுதியா என்ன ? “ என்று பதட்டத்துடன் என் அருகில் எழுந்து வந்தார். 

“ ப்ச்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்ல ஹரி. எனக்கு இது புது இடம் இல்லையா ? அதான் சட்டுன்னு தூக்கம் பிடிக்கலை . தூக்கம் இல்லாததனால இப்படி இருக்கும்”. 

“ என்னமோ சொல்ற … நானும் நம்பறேன். ஆனா ப்ளீஸ்டா வானு உனக்கு ஏதாச்சும் இன்கன்வீனியன்ட்டா ஃபீல்  ஆனா தயவு செஞ்சு என்கிட்ட சொல்லுடா … எனக்கு உன் சந்தோஷம்தான் எல்லாத்தையும் விட முக்கியம் “.  என்று கூறியபடி என் நெற்றியில் முத்தமிட்டார். நான் அதை மிகவும் இரசித்தேன். ( இரசிக்காமல் இருக்க முடியுமா ? 😍) 

என் பார்வை உனக்கும் ரகசியமா ?Where stories live. Discover now