நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 13

362 13 0
                                    

13

அருண் விஷயம் தெரிந்ததும் மிகவும் வருந்தினான். தம்பி தருண் கூட சண்டை போடாத குறை.

''நாங்க அண்ணன்களாக இருந்து கொண்டு அவ படிப்பு பாதியில நிறுத்தி...வேலைக்கு போ என்று சொல்றது அழகாடா ? உனக்கு அழகா தெரியுதா ? உனக்காக பட்ட கடனை அவளை வேலைக்கு அனுப்பி அடைப்பது கேவலம்டா'' என திட்டினான். தருண் ரோஷக்காரனாச்சே.

''அவ சம்பாதிப்பதை வட்டியும் முதலுமா திருப்பி எறிஞ்சுடமாட்டேனா? எனக்கு பாரின் வேலை வந்தா ஒரு நாள் சம்பளம் இவ உழைச்சு கொண்டு வரும் ஒரு மாச சம்பளம்'' என்றான்.

அருணுக்கு கோபம் வர விவாதம் முற்றியது. சண்முகவேல் வர பேச்சு நின்றது. தந்தையிடம் அருண் பணிவான குரலில் நியாயம் கேட்டான். அவரோ,

''அவ வேலைக்கு போகலைன்னா உன் தம்பிக்காக பட்ட கடன் எல்லாம் உன் தலையில தான் விழும்! உனக்கு பாரம் ஏற்றக்கூடாது என்றுதான் டெம்ப்ரவரியாகத் தான் அவ போகப்போறா'' என்று ஏதோ தகவல் சொல்லுபவர் போல சொல்லிவிட்டு போனார்.

''அண்ணா உனக்காகவும் அப்பா கடன்பட்டு இருக்கார்'' என்றான் தமையனை பார்த்து. அருணுக்கு கோபம் வர,

''ஆனா நான்தான் உழைச்சு கட்டிக்கிட்டு இருக்கேன்'' என்றான் அவன்.

''என்னண்ணா கோவிச்சுக்கிட்டே ? நாளைக்கு நான் நல்லா சம்பாதிச்சா, எல்லாம் நம்ம குடும்பத்துக்குத்தானே'' என்றான் மற்றவன். இருவரது வாதங்களையும் தனதறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த தாரிகா கோபமாக எழுந்து வெளியே வந்தாள்.

''நிறுத்துங்க ரெண்டு பேரும்'' தாரிகா கோபமாக சொல்ல இருவரும் நிறுத்திவிட்டு அவளை பார்த்தனர்.

''யார்? யாருக்காக? எதுக்காக சண்டை போடுறீங்க? என்னால ஏதோ முடிஞ்ச உதவி செய்ய நான் கடமைப்பட்டு இருக்கேன். நம்ம குடும்பத்துக்கு தானே? அப்புறம் அவங்க அவங்க கடமையை சரிவர செய்தாலே போதும்'' என்றவாறு தருணை ஒரு பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தாள்.

''எனக்கு தெரியாதா வேலைக்கு போகமாட்டேன்னு அடம் பிடிக்க? எதிர்த்து வாதாட முடியல! மானம் போயிடும் என் பொணத்தை கட்டிக்கிட்டு ஒப்பாரி வையின்னு அப்பா சொன்ன ஒரே வார்த்தைக்காகத்தான் நான் வேலைக்கு போறதாக இருக்கேன்.'' தங்கை சொல்ல அருண் தருணை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தான்.

''அருண் அண்ணா! நீங்க குடும்பம் ஆகிட்டீங்க ! உங்களுக்கு பொறுப்புகள் மேலும் கூட்ட விரும்பல. தருண் அண்ணா சொன்னது போல அவருக்கு வேலை கிடைச்சா சந்தோஷம்...நான் பார்த்துக்கிறேன்...நம்ம குடும்பத்துக்கு உழைக்காம வேறு யாருக்கு ? இனி இதைப்பத்தி யாரும் பேச வேண்டாம் எனக்கு டிப்ரஷன் ஆகுது. நான் வேலை செய்துகிட்டே படிக்குறதா இருக்கேன் ப்ளீஸ்'' என்று தனது நீண்ட பேச்சை முடித்தாள்.

அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த சண்முகவேலுக்கு பெருமையாக இருந்தது. வத்ஸலா வோ தருணை பார்த்து,

''கற்றுக்கொள்ளுங்க தம்பி ! உங்கள் தங்கையிடம் நிறைய கற்றுக்கொள்ள இருக்கு'' என்று விட்டாள். தருணுக்கு தன்மானம் சுட்டது. காட்டிக்கொடுக்காது இருந்தான்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் ஒன்று சில தகுதிகள் கேட்டு இருந்தது. அதற்கு சில பிரத்தியோக வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று அவன் போகத்தொடங்கினான். அதற்குண்டான செலவுகள் கூட தாரிகாவின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி சண்முகவேல் ஒதுக்கி அவனுக்கு கொடுத்தார் ஒரு கரை காணட்டும் என்று.

தர்சனா எல்லாம் பார்த்து திட்டி தீர்த்தாள். தனது வாழ்க்கையை பாழாக்கியதும் இல்லாது, தனது தங்கையின் எதிர்கால வாழ்க்கையையும் பாழாக்கி கொண்டு இருப்பதை பார்த்து நியாயம் கேட்க போன போது தாரிகா தடுத்தாள்.

இப்படியாக தாரிகா வேலை செய்து கொண்டே கூடவே படித்த தோழிகள் அபர்ணாவும், மீனாவும் ஐ.ஏ.எஸ் படிப்புக்கு தயாராகி கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வீட்டுக்கு போய் ஆன்லைன் பாதி, அவர்களிடம் பாதியாக படிப்பை தொடர்ந்தாள்.

அவளது ஆர்வத்தை பார்த்து வத்ஸலா பொறுக்காது கணவனிடம் சொல்லி தவணை முறையில் ஒரு கணனி வாங்கி வீட்டில் ஒரு இணைய வசதியையும் ஏற்படுத்தி கொடுத்தாள். அண்ணி என்றாலும் அவளும் ஒரு தோழியானதில் கண்ணீரோடு கட்டிக்கொண்டாள் தாரிகா.

ஒரு வருடம் ஓடிப்போனது. தாரிகா வேலைப்பளு கூட இருந்தாலும் படிப்பை விட்டாள் இல்லை. அவளது படிப்பை மீண்டும் குழப்பியே தீருவேன் என வந்து நின்றது அடுத்த சம்பவம்.
(...)

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now