22
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களில் பெரியவர்கள் முதல் நுழைய, பின்னால் அபிநவ்வும், ஆர்ஷனும் சிரித்து பேசியவாறு நுழைந்தார்கள். ஆர்ஷன் அந்த நடுத்தர வர்க்கத்தின் வீட்டின் சூழலை ஆராய்ந்தவாறு,''இந்தியாவில் வீடுகள் ரொம்ப வருஷங்கள் ஆனாலும் ஸ்ட்ராங்கா இருக்குடா'' என்றான் அருகே வந்த அபிநவ்வின் காதில்.
''அடேய் ! நீ மாப்பிள்ளைடா ! கன்ஸ்ட்ரக்ஷன் ஓனர் வேலையை காட்டாதே !''
''மாப்பிள்ளைன்னா மவுத்துல மாவுக்கட்டு போட்டு இருக்கணுமா?'' ஆர்ஷன் கிண்டலாக கேட்டான்.
''போட்டேன்னா ...மாப்பிளைன்னா கல்யாணம், காதல், ஹனிமூன், கனவுல மிதந்துகிட்டு கண்கள் பளபளக்க பயந்துகிட்டு இருக்கணும்...''
''ஹேய் அபி டார்லிங் ! நீ very fast'' என்றவன் எதிரே வந்த தர்சனா, வத்ஸலாவை பார்த்து விட்டு மீண்டும் அபிநவ்விடம் காதில்,
''இதில் யாரு பொண்ணு ?'' என்றான்.
''அடேய்.. அடேய்...அவங்க பொண்ணோட அக்கா.. அண்ணிடா ! இதுக்குத்தான் பொண்ணோட போட்டோ பாருன்னு சொன்னேன்'' முறைத்தான்.
''ஏய் கூல் டார்லிங் ! நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க !! அழகான பேமிலி பார்க்க சந்தோஷமா இருக்கு'' என்றான். அங்கே குழுமி இருந்தவர்களை பார்வையால் அளவெடுத்தபடி, சண்முகவேல் உள்ளே வேலையாக இருந்தவர் ஓடி வந்தார்.
''வாங்க... வாங்க'' என கரம் கூப்பி வரவேற்று கொண்டார்.
''அண்ணி ! மாப்பிளை செமையா இருக்கார்லே ? தாரிகா கொடுத்து வைச்சவள் தான். அப்பா ஏதோ ஒரு குரங்கை பார்த்து இருப்பார்ன்னு பயந்துக்கிட்டிருந்தேன். ஆனா மாப்பிளை.. அவர் முகம்.. ரொம்ப நல்லவர் போல இருக்கார்..'' தர்ஷனா சந்தோஷமாக தனது சர்டிபிகேட்டை கொடுத்தாள்.
''ஆமா தர்ஷா ! எனக்கும் ரொம்ப புடிச்சு போச்சு.. நேர்ல இன்னும் நல்ல ஸ்மார்ட்டா இருக்கார்...பக்கத்தில இருப்பவங்க அவர் பேரன்ட்ஸ் போல.. உறவுக்காரங்களும் நல்லவங்க போலத்தான் தெரியுது'' வத்ஸலாவும் தன் பங்குக்கு திருப்தியாக சொன்னாள்.
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...