நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 31

311 10 0
                                    

31

அறைக்குள் வந்த தாரிகா கொஞ்சம் நிம்மதியாக சுவாசித்தாள் எனலாம். ஆடையை மாற்றிவிட்டு கட்டிலில் ஏறி உட்கார்ந்தவளுக்கு தூக்கம் வரவே மாட்டேன் என்று போர்க்கொடி தூக்கியவாறு சண்டை இட்டது. பூட்டிய தாழ்ப்பாளை ஒரு தடவை பார்த்துக்கொண்டாள்.

''தாழ்ப்பாளை உடைச்சுக்கிட்டு வந்து ரேப் பண்ணிடுவானோ?'' ஒரு மனது கேட்க,

''சே..கருமம்..என்ன இந்த கேவலமான சிந்தனை வருது...அவன் முகத்தை பார்த்தா அப்படி செய்யுற ஆள் இல்லைன்னு தான் தெரியுது...முதல் நாள் என்றபடியால் போ.. போய் தூங்கு என்றுவிட்டான் போலும்... அடுத்தடுத்த நாள் எப்படியும் அவனது நூத்தியாறாவது ஆள்ல நான் ஏழாகிடுவேனோ?'' என கேட்டாள்.
அதை நினைத்து பார்த்தவளுக்கு தானாக உடல் இறுகி உணர்வுகள் மரத்து போவதை உணர்ந்தாள்.

'இல்லைடி..ஒண்ணுமில்லை..அப்படி எதுவும் நடவாது ...நான் சொன்னேன்ல உன்னை மீறி எதுவும் நடக்காது...உன் பெண்மையை அவன் தீண்டனும் என்றால் நீ ஒத்துழைக்கணும்....தாலி கட்டியவன் என்பதற்காக உணர்ச்சியற்று ஜடம், பிணம் போல் படுத்து இருக்க முடியாது...பாதிப்பு உனக்கு தான்...அவன் தொட வரும் போதெல்லாம் நீ நேரிடையாகவே சொல்லிவிடு... எனக்கு இது வேண்டாம்... உன்னை பார்த்தால் எனக்கு உணர்வுகள் கிளர்ந்து எழவில்லை என...' படுக்கை அறை கண்ணாடியில் தன்னை தானே பார்த்து சொல்லிக்கொண்டாள்.

'முண்டம் ..அவன் பாரின் காரன் ..பலதும் அறிந்தவன் ...உன் வீட்டுக்காரங்க முன்னிலையில் உங்க பொண்ணுக்கு என்னென்னு பாருங்கன்னு சொல்லிட்டான்னா ?' மனசாட்சி கேட்க,

'இங்கு சமாளிச்சுட்டா போதும்... லண்டன் போனதும்...இருக்கு...என் ராட்சியம் தான்...இப்போ தூங்கு' என மனதை அடக்கிவிட்டு தூங்க முயற்ச்சித்தாள்.

ஒரு வித நிம்மதியற்ற தூக்கம் கலைவதும், புலம்புவதுமாக கழிய ஆழ்ந்த தூக்கம் அதிகாலை நான்குக்கு வந்தது.

தன் மேல் ஒரு உருவம் ஊர்வது போல இருக்க வாய் விட்டு அலறியபடி எழுந்து கொண்டாள். சத்தம் கேட்டு ஆர்ஷன் பாதி தூக்கம் கலைய அவளது அறைக்கதவை பட் பட் என்று தட்டினான்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now