74
வண்டிக்குள் அமைதி தாரிகா மனது,
நினைவு முழுதும் ஆர்ஷனை சுற்றியே வந்தது. கையில் இருந்த மொபைலில் அவனது வாட்சப் ப்ரொபைல் திறந்து பார்த்தாள். கையில் அவார்ட் வாங்கியவாறு, உதட்டிலே அவனது ரெடிமேட் புன்னகையுடன், சந்திரனின் பவுர்ண்மி முழு நிலவு போல முகம் பிரகாசிக்க நிற்கும் படம் வைத்து இருந்தான். கண்வெட்டாது அதையே பார்த்தவள், அதை தனது மொபைலில் திறக்க வரும் படமாக போட்டாள். உதடு மெல்ல புன்னகைத்துக்கொண்டது.அருகில் இருந்து பார்த்த வத்ஸலா,
''மாப்பிளை நம்ம சினிமா டைரக்டர்ஸ் கண்ணுல பட்டா அவரை மொய்த்து விடுவாங்க. ஒரு ரவுண்டு வரலாம்'' என்றாள். தாரிகா ''அண்ணி பார்த்துவிட்டாளா? என்ற நினைவு அப்பொழுது தான் வர, வெட்கம் வந்து தொலைத்தது.வீட்டில் சாவித்திரியும் சண்முகவேலும் நிலை கொள்ளாது தவித்தவாறு இருந்தனர். சாவித்திரி புலம்ப தொடங்கினாள்.
''வருஷம் பிறக்க போகுதுங்க. நம்ம பொண்ணு இப்படியே இருக்கிறதை பார்த்துட்டு இருக்கணுமா? என்னால முடியல. அவளுக்கு ஒரு வழியை கட்ட மாட்டீங்களா? அதை பார்த்துட்டு நான் கண் மூடிடுறேன் ''
''சாவித்திரி புலம்புறதை நிறுத்து! நாம பொறுமையாக இருக்கணும். எடுத்தேன் கவிழ்த்தேன்னு செய்த செயலால் இப்போ நல்லா அனுபவிக்கிறேன். அவ ஏற்கனவே அப்செட்டாகி போய் இருக்கா.. நாம புலம்பி வேறு அவளுக்கு இருக்குற இடத்தை நரகமாக்கி விடணுமா ?''
''எப்படிங்க வாழுற வயசுல இப்படி வெட்டிக்கிட்டு வந்து நின்னா, எந்த பெத்த தாய்க்கு தான் நிம்மதி மூச்சு வரும்? இப்போ மனநிலை டாக்டர்ன்னு சொல்றீங்க.. பையித்திக்கார டாக்டர் தானே? அது அப்போ என் பொண்ணுக்கு...அய்யோ என் பொண்ணுக்கு மன நிலை சரியில்லையா? சொல்லுங்க'' அவள் உலுக்க,
''சாவித்திரி சும்மா கண்டதையும் கற்பனை பண்ணாதே! அவர் கவுன்சிலிங் டாக்டர், உளவியல் டாக்டர், மனதுக்குள்ளே புகுந்து என்னென்னு கண்டுபிடிக்குற டாக்டர், நம்ம பொண்ணும் ஒத்துக்கிட்டா. அவ மனசுக்குள் என்ன இருக்குன்னு அறியணும். அவங்க வரட்டும் நீ பொறுமையாக இரு! நான் சம்பந்திங்க கூட பேசினேன். அவங்க நம்ம பொண்ணு மேல ஒரு குற்றமும் சொல்லலை. உங்க பொண்ணுக்கு பிடிக்காத கல்யாணம் என ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ன்னு சொன்னதோடு சரி. அவங்க பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. நமக்கு கொடுத்து வைச்சது அவ்ளோதான்''
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...