26 ஆலோசனை

320 30 4
                                    

26 ஆலோசனை

அனைவரது கண்களும், மதங்கனும் குருநாதரும் அமர்ந்திருந்த திசையை நோக்கி கோபத்துடன் திரும்பின.

"அரசே, இது உண்மை இல்லை. நான் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டுக்காகவே பாடுபட்டவன். எனது எண்ணம் முழுவதும் இந்த நாட்டைப் பற்றியும் அதன் முன்னேற்றத்தை பற்றியும் மட்டுமே இருந்தது. நான் எப்படி இவ்வாறெல்லாம் பேசியிருப்பேன்? தாங்களும் இளவரசன் வாகைவேந்தனும் என் இரு கண்கள்" என்றான் மதங்கன் உணர்ச்சி பெருக்கோடு.

"அரசே, இந்த மந்திர பேழை ஒரு கண்கட்டு வித்தை. தாம் என்னை அறிய மாட்டீரா? நான் எவ்வாறு அப்படி எல்லாம் பேசியிருப்பேன்? இவள் தங்களை முட்டாளாக்க பார்க்கிறாள். அவள் ஒரு சூனியக்காரி" என்று தன்மயாவை காட்டி ஊளையிட்டார் குருநாதர்.

"நாவை அடக்குங்கள்... இன்னும் ஒரு வார்த்தை நீங்கள் அவளைப் பற்றி கூறினால், தங்கள் நாக்கு துண்டிக்கப்படும்" என்று முழங்கினான் அமுதன்.

அவனது கோபத்தை கண்டு திகைத்தாள் தன்மயா. அனைவரும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நிற்பதை கவனித்தாள் அவள்.

"எம் விருந்தாளியை தாம் அவமதிப்பதை எம்மால் பொறுக்க இயலாது" என்றார் அரசர்.

"மன்னவா! தாம் என்னை விட அவளைத்தான் நம்புகிறீரா?" என்றார் குருநாதர் உருக்கமாய்.

"நான் அவளை நம்பவில்லை. அவள் கையில் இருக்கும் மந்திர பேழையை நம்புகிறேன். அதன் கீர்த்தியை அனைவரும் கண்டோமே...! அப்படி இருக்கும் போது எப்படி அதை நம்பாமல் இருக்க முடியும்?"

மக்களை நோக்கி திரும்பிய அரசர்,

"மக்களே தாம் அதை நம்பவில்லையா?" என்றார்.

"நம்புகிறோம்... நம்புகிறோம்..." என்றார்கள் மக்கள்.

"இது தான் நீர் எனக்கு காட்டும் நன்றியா? உங்களுக்காகவும் உங்கள் நாட்டுக்காகவும் நான் அனைத்தையும் தியாகம் செய்தேன். என்னைப் பற்றி மக்களிடம் கேட்டுப் பாருங்கள். எனக்கு எதிராய் இந்த அவைக்கு தாம் யாராவது ஒருவரையாவது அழைத்து வர முடியுமா? ஒரே ஒருவர் முன்வந்தாலும் நான் என் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்றார் குருநாதர்.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now