27 காலப் பயணி

312 27 2
                                    


27 காலப் பயணி

"திருமாவளவர் உயிரோடு இருக்கிறார். இந்திர விழாவை முன்னிட்டு நேற்று பூம்புகாரில் நடைபெற்ற ரத போட்டியில் அவர் கரிகாலன் என்ற பெயரில் வெளிப்பட்டிருக்கிறார். திருமாவளவன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி சோழ நாட்டை உலுக்கியிருக்கிறது. சிறைச்சாலைக்கு வைக்கப்பட்ட தீயில் இருந்து திருமாவளவர் உயிரோடு தப்பித்துவிட்டார் என்பதை இப்பொழுது கூட யாராலும் நம்ப முடியவில்லை."

தன் கண்களை மூடி, சூழ்நிலையை சமாளிக்க தயாரானாள் தன்மையா.

"ஆனால் நீ அதைப்பற்றி கூறினாய். அவருடைய காரணப் பெயரான கரிகாலனை கூட உச்சரித்தாய்.  திருமாவளவர் உயிரோடு இருக்க வாய்ப்பு இருப்பதாக நீ என்னிடம் சவால் விட்டாய். நீ அதைப்பற்றி கூறியபோது நான் நம்பவில்லை. யாராலும் ஊகிக்க முடியாத ஒரு நிகழ்வை உன்னால் எப்படி கூற முடிந்தது? இதெல்லாம் என்ன, தன்மயா? இதை பற்றி உனக்கு எப்படி தெரிந்தது? இதன் பின்னால் ஏதாவது ஒரு நாட்டின் சதி ஒளிந்துள்ளதா? அது பற்றி உனக்கு தெரியுமா?"

இல்லை என்று தலையசைத்தாள் தன்மயா. இந்த திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. தான் ஒரு கால பயணி என்பதை வெளிப்படுத்தாமலேயே அங்கிருந்து சென்று விடலாம் என்று அவள் எண்ணி இருந்தாள். ஆனால் அப்படி நடப்பதாக தோன்றவில்லை. விதி, அவள் உண்மையை அமுதனிடம் கூற வேண்டும் என்று விரும்புகிறது. அவளுக்கு இப்பொழுது வேறு வழியில்லை. அவனிடம் சொல்லித்தான் தீர வேண்டும். அவள் அங்கிருந்து செல்லும் முன், அமுதன் அதை பற்றி தெரிந்து கொண்டு தான் தீர வேண்டும். காலப்பயணம் என்பது புரிய வைப்பதற்கு கடினமான சங்கதியாக இருந்த போதிலும்.  அவனுக்கு புரிய வைக்கத் தான் வேண்டும்.

எதையோ யோசித்த அமுதன்,

"நீ விவேக் என்று உங்கள் நாட்டின் ஒரு துறவி பற்றி கூறினாயே, அவர் இதைப்பற்றி உன்னிடம் கூறினாரா?" என்றான்.

உண்மையைக் கூறாமல் அவனிடமிருந்து தப்பிப்பதற்கு அமுதனே அவளுக்கு ஒரு வழி காட்டினான் தான். ஆனால் அதை அவள் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இல்லை என்று தலையசைத்தாள். உண்மையை அவனிடம் உடைத்துக் கூற அவள் விரும்பினாள். அமுதனை ஏமாற்ற அவளுக்கு மனம் வரவில்லை.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now