அத்தியாயம் 1/2

303 14 22
                                    

👩‍❤️‍💋‍👨இதயத்தில் இணைந்த இதழி 👩‍❤️‍💋‍👨

👄அத்தியாயம்....1

🎵🎶இதழில் கதை எழுதும் நேரமிது...
இதழில் கதை எழுதும் நேரமிது...
இன்பங்கள் அழைக்குது-ஆ-ஆ

மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது-ஆ-ஆ🎶🎵

என்ற உலக நாயகனின் பாடல் தன் வீட்டின் தொலைக்காட்சியில் ஒலிக்க.....அதைக் கேட்டப்படியே தன் போலீஸ் சீருடையை களைந்தவன்....

"இன்னைக்கு என் தேவதைக்கு பிறந்தநாள்.... கோவிலுக்கு போய் அவ பெயரில் அர்ச்சனை பண்ணலாம்னு பார்த்தா... இன்னைக்குன்னு பார்த்து Higher Officers Torture வேற .... ஹ்ம்......." என்று தனக்குள் புல்ம்பியவன்.... குளியலறை சென்று Showerai திறந்து.. நீரில் தன் உடலை நனைத்தவன்....

"அவ இந்நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருப்பாள்...அவ கோவிலுக்கு போய் இருப்பாளா...இப்போ எந்த நாட்டுல இருக்கான்னு கூட தெரியாம நம்மள 5..6 வருஷமா புலம்ப விடுறாளே.. ஹ்ம் சரி ....எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.... நல்லா தான் இருப்பாள்... " என்று தனக்குள் எண்ணியவனின் இதயம் அவளை நினைத்தாலே எக்குத்தப்பாக எகிரியது....

மீண்டும் அதே பாடலின் வரிகள் இவன் செவியில் ஒலிக்க.....
இந்தப் பாடலின் வரிகள் இவன் வாழ்வோடு எவ்வளவு ஒத்துப் போகிறது என்று யோசித்துக் கொண்டே குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவன், தலையை துவட்டி கொண்டிருந்தவனின் கைபேசி அலற .....

"ஹலோ" என்றான் நம் கதையின் நாயகன் ......

மறுமுனையில் பேசியவரோ....
"தம்பி....நான் பூஜா அம்மாவ அழச்சுக்கிட்டு மார்க்கெட்டுக்கு வந்தேன்....வந்த இடத்துல அவங்களுக்கு சின்னதா ஒரு ஆக்சிடென்ட்.... அதான் உங்களுக்கு போன் பண்ணேன்...." என்ற பெண்ணின் குரலை கேட்டு....

"என்ன சொல்றீங்க.... இந்த மாதிரி சமயத்துல பூஜாவை வெளிய அழச்சிட்டு போகக் கூடாதுன்னு உங்களுக்கு வான் பண்ணி இருக்கேன் தானே....மீறி ஏன் அழைச்சிட்டு போனீங்க..." என்று கோவப்பட்டவனின் குரலை கேட்டு....

👩‍❤️‍💋‍👨இதயத்தில் இணைந்த இதழி 👩‍❤️‍💋‍👨Where stories live. Discover now