அத்தியாயம் 9/10

129 10 22
                                    

👩‍❤️‍💋‍👨இதயத்தில் இணைந்த இதழி 👩‍❤️‍💋‍👨

👄அத்தியாயம் 9/10

*****************************************

இதழியின் கைக்குறிப்பு புத்தகத்தில் எழுதி இருக்கும் சொற்களை இதயக்கனி அவள் அறையில் நின்றப்படியே வாசித்து கொண்டு இருந்தான்....

📍FLASH BACK

பள்ளியில்..... லைப்ரரி வாத்தியார் கேசவன்.. மாணவிகளிடம் அத்து மீறி நடந்து கொள்வதை தட்டி கேட்ட என்னை அந்த பள்ளியில் பணி புரியும் பலரும் பாராட்டினர்......

ஆனால் யாருடைய சொற்களும் என் செவியில் விழ வில்லை.... காரணம் என் கண் முன்னே நின்று இருந்த என் இதயாவின் மீது தான் என் கவனம் முழுதும் இருந்தது......

அன்றைய தினத்தில் இருந்து அந்த பள்ளியில் நான் தனித்துவமாக தெரிய ஆரம்பித்தேன்....

கேசவனை தலைமை ஆசிரியர் அம்பிகா... வேலையில் இருந்து நீக்கியவர்கள்... என் இதயாவின் ஆலோசனை படி அவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர்...

சில நாட்கள் கடந்த நிலையில் அன்று எங்கள் பள்ளியில் SPL & ASPL ளை தேர்ந்தெடுக்க மாணவர்கள் மத்தியில் ஆலோசனை நடந்து கொண்டு இருக்க...
அங்குள்ள மாணவர்கள் பலரும் ASPL க்காக என் பெயரை பரிந்துரைத்தனர்...

அணிலா - ஏய் இதழி.... Super டி.... நம்ம ஸ்கூல் 11th Std ஸ்டுடென்ட்ஸ் எல்லோருமே ASPL க்காக உன் பெயரை தான் சொல்லுறாங்க.... போ டி...போய் உனக்கு இந்த எலெக்ஷன்ல நிக்க சம்மதம்ன்னு சொல்லு போ...... என்று என் தோழி என்னை வற்புறுத்தினாள்...

No அணிலா.... எனக்கு இதெல்லாம் செட் ஆகாது.....இரு நான் போய் principalள்ளை பார்த்து என்னால ASPL க்கு நிக்க முடியாதுன்னு சொல்லிட்டு வரேன்....

என்ற நான்.... HM.அம்பிகா mam ரூமுக்கு சென்றேன்..... அங்கே நான் எதிர்பாராத வண்ணமாக இதயா... அவருடைய அம்மா தேவகியிடம் நின்று பேசிக்கொண்டு இருந்தார் .....

இதழி - May I come in mam...
என்று permission கேட்டப்படி நான் அம்பிகா mam அறைக்குள் நுழைய..அம்பிகா mam அங்கே இல்லை...

👩‍❤️‍💋‍👨இதயத்தில் இணைந்த இதழி 👩‍❤️‍💋‍👨Where stories live. Discover now