அத்தியாயம் 13

102 8 10
                                    

👩‍❤️‍💋‍👨இதயத்தில் இணைந்த இதழி 👩‍❤️‍💋‍👨

👄அத்தியாயம் 13

***************************************************
✍🏼நிகழ் கலாம்...

தன் வீட்டில் இருந்தப்படி இதழியின் கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்த இதயக்கனி ... அவளின் ஆழ்மனதில் அவள் தந்தையிடம் அவளுக்கு கிடைக்காத அரவணைப்பை தான் முதலில் தன்னிடம் அவள் எதிர்ப் பார்த்து இருக்கிறாள் என்பதை இதழியின் ஒவ்வொரு எழுத்துகளிலும் இதயக்கனி புரிந்து கொண்டான்...

சிந்தனை முழுதும் அவளை பற்றிய நினைவுகள் மட்டுமே நிறைந்து இருக்க..... மீண்டும் அவன் இதழியின் கைக்குறிப்பு புத்தகத்தை படிக்க போகும் முன்பு வாசலில் இருந்து calling bell சத்தம் கேட்க.... டைரியை தன் படுக்கையில் வைத்தவன்... வாசல் கதவை திறக்க... அங்கே இவனின் நண்பன் அன்புமணி கையில் பால் பாக்கெட்டுடன் நின்று இருந்தவன் ...

மணி - என்னடா....எவ்வளவு நேரம் bell அடிக்கிறது.... மணி 6 am ஆகுதே... ஜிம் போகல.....இன்னுமா நீ தூங்கிகிட்டு இருக்க....என்றபடி... தன் கையில் இருந்த பால் பாக்கெட்டை பிரிட்ஜ்க்குள் வைத்தவன்...

அன்பு மணி - சரி டா... நான் கிளம்புறேன்... மதியம் சாப்பாடு ஸ்டேஷனுக்கு கொடுத்து அனுப்பவா...? என்று கேள்வி கேட்க.... இதயக்கனியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை....

அன்பு மணி - என்னடா கனி... ஏன் ஒரு மாதிரி இருக்க..... பூ... பூஜாக்கு ஏதாவது பிரச்சனை யா........ என்றவன் இதயக்கனி அருகில் செல்ல.... சட்டென்று அன்பை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான் இதயக்கனி...

அன்பு மணி - கனி என்னடா மச்சான்... என்னாச்சு.... என்று ஏதும் புரியாமல் குழப்பத்துடன் இவன் கேள்வி கேக்க...

நா... நான் இதழியை பார்த்தேன் டா...என்ற இதயக்கனி .... மீண்டும் அன்பை கட்டிக்கொண்டு அழுதான்...

என்ன டா சொல்ற..
சித்துவையா...!? அவ எப்போ டா இந்தியா வந்தா..? இப்போ எங்க இருக்கா..? அவ உன்னை பார்த்தாளா...? நீ அவகிட்ட பேசுனியா...? என்று அன்பு மணி தன் கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றான்...

👩‍❤️‍💋‍👨இதயத்தில் இணைந்த இதழி 👩‍❤️‍💋‍👨Where stories live. Discover now