திக் திக் நொடிகள்

1.2K 116 29
                                    

பின்தொடர்ந்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அந்த உருவம் நின்றுவிட்டது.இவனும் "அய்யய்யோ கண்டுப்பிடிச்சிருச்சா "என்று நின்றுவிட்டான்.

"அய்யோ யாராவது காப்பாத்துங்க "எனத் கத்த வேண்டும் போல் இருந்தது அமருக்கு.
அவன் கையில் பக்கத்து ஊரிலிருந்து பூஜை பிரசாதமாக கொண்டுவந்த தேங்காய் நாட்டியம் ஆடியது பயத்தில். அப்பேய் அவனை மெதுவாக ஸ்லோமோஷனில் திரும்பிப் பார்த்தது.
அவ்வளவு தான் "ஆத்தா "என்று கத்தி கையில் இருந்த தேங்காயை அவள் மீது எறிந்து விட்டு அலறியடித்து ஓடினான்.
பயத்தில் அவன் ஏதோ ஒரு வழியில் சென்றுவிட்டான்.அப்பறம் தான் அவனுக்கு தெரிந்தது ,அவன், வீட்டை தாண்டி ஓடி வந்துவிட்டான் என்று.மறுபடி வீட்டை நோக்கி ஓடினான்,இந்த முறை கவனமாக.

வீட்டை அடைந்த நிம்மதியுடன் "அப்ப்பா "என்று உள்ளே நுழைந்தான்.
உள்ளே ஒரு குரல் "ஓடி வந்துட்டா விட்டுடுவேனா ,உசுரு உடம்புல இருக்காது பாத்துக்க என்னையே ஏமாத்துறியா "என்று அலறியது. அமருக்கே அறியாமல் அவன் கைகள் நடுங்கின.பயத்தை விழுங்கி விட்டு பேசினான் அமர் "அப்படிலாம் ஒன்னும் இல்ல என்னை ம.ன்.னி...."என்று முடிப்பதற்குள் அக்குரல் "டே சுரேஷ் எடு டா அருவாள ஓடிப்போன உன் தங்கச்சிய வெட்டி சாயி டா "என்றது .
குலம்பிப்போன அமர் சட்டென்று உள்ளே நுழைந்தான்.உள்ளே அவன் அம்மா டி.வி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அமரைப் பார்த்ததும் "அமர் வாடா இந்த பங்கஜத்தைப் பாத்தியா ஓடிப்போன தன் பொன்ன தன் பையனை வச்சே வெட்ட சொல்லுறா .இவளாம் பொம்பளயா "என்று கூறி முந்தானையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அமர் கோபமாய் "என்னமா, நடுராத்திரியில போய் டிவி பாத்துட்டு இருக்க "
அவளோ" உனக்காக தான்டா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் போர் அடிச்சது அதான் நீ வர வரைக்கும் டிவி பாக்கலாமே னு பாத்தேன் டா.சரி,பக்கத்து ஊர் திருவிழா எப்படி இருந்திச்சு?ஆமா இன்னைக்கு பூஜை நடந்திருக்குமே!!பிரசாதம் குடுக்கலையா ?"என்றாள்.

"அதலாம் ஒன்னும் குடுக்கல " என்றான் சலிப்பாக.
"சே வெளில ஒரு பேய் கிட்ட இருந்து தப்பிச்சு வந்தா வீட்டுல ஒரு பேய் டிவி பாத்தே கொல்லுது.முதல்ல டிவி Connection ஐ கட் பண்ணணும்" என்று முணுமுணுத்தான்.
"டே சாப்பிட்டு போடா "என்று கத்தினாள் அமர் அம்மா.
"வேணா மா "என்று கூறி விட்டு படுக்கையில் விழுந்தான் அமர்.போர்வையை இறுக்க போர்த்திக் கொண்டான்.அவனுக்கு தூக்கமே வரவில்லை கண்ணை மூடினால் பேய் மீது தேங்காய் வீசியது தான் வந்து சென்றது.

அந்த இரவு தூங்கா இரவாய் கழிந்தது.
அடுத்த நாள் அவனுக்கு யாரிடமாவது இதை சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றியது.வந்து மாட்டியது பாலா தான்....

தொடரும்...
தயவு செய்து நா ஏதாவது தப்பு பண்ணிருந்தா மன்னிச்சுருங்க!
என் கதை உங்களுக்கு பிடுச்சிருந்தா vote பண்ணுங்க இல்லைனா comment பண்ணுங்க.
அமைதியா மட்டும் இருந்துறாந்திங்க..அப்புறம் நான் கதை ங்ற பேருல மொக்க போட்டு சாவடுச்சிருவேன்.உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்...

நான் அவள் இல்லைWhere stories live. Discover now