பேய் நிக்குதா

1.1K 94 36
                                    

மறுநாள் வீட்டில் தடபுடலாக கிளம்பிக் கொண்டிருந்தனர்.வாடகைக் கார் வந்து வாசல் முன் நின்றது.

அமர் ,அம்மா ,அண்ணன், அந்நி, பாலா..அனைவரும் ஏறிக் கொண்டனர்.

"அத்தை பொன்னுக்கு புடவை ,பூ ,மஞ்சள் ,குங்குமம் -எல்லாம் எடுத்துவச்சுடிங்களா "என்றாள் அந்நி.

"எக்கா என்ன .......பொன்னு பாக்க. போறோமா  இல்ல பொட்டி கடை போடப் போறோமா ??இப்ப தான் பொன்னவே பாக்க போறோம் அதுக்குள்ள புடவை,பூ ,புன்னாக்கு லாம் தேவையா?"
என்றான் பாலா.

"டே பாலா நான் பொன்னை ஏற்கனவே பாத்துட்டேன் பா.பொன்னு சிலை மாதிரி இருக்கா "

"ஏன்  ஏதாவது சாமியார் விட்ட சாபமா"

"இந்த நக்கல் தான வேனாறது.பொன்ன பாக்க தான போற .பாத்தவுடனே வாயடைச்சு போயிறுவ .அந்ந பொன்னுக்கு heavy competition டா அதான் புடவ ,பூ லாம் குடுத்து நல்ல குடும்பம் னு பேறெடுத்திட்டா பொன்னு குடுக்க யோசிக்க மாடாங்க. இதெல்லாம் உனக்கு புரியாது போடா "

"அது சரி அப்படி நினைக்காம என்னடா இதுங்க இலிச்சவாய்ங்களா இருக்கு னு நினச்சிட்டா என்ன பண்றது "என்றான் பாலா.

"ம்ம்க்கும்"என்று முகம்திருப்பிக் கொண்டாள் அந்நி.

"டே என்னாடா உன் குடும்பத்துல நீ மட்டும் தான் லுாசு னு நினச்சேன். பட் உங்கள் அந்நி ஆசம் டா ஆசம் "

பதிலெதுவும் கூறாமல் சன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான் அமர்.

"டேய் "என்று அமர் முகத்தை நெருங்கினான் பாலா."டேய் " என்று மறுபடியும் கத்தினான் பாலா.

அமர் திடீரென அலறியடித்து எழுந்தான்.
"அடடேய் இவ்ளவு நேரம் தூங்கிட்டா இருந்தா "என்றான் பாலா.

அமர் முகமெல்லாம் பதட்டம்.மூச்சை மூன்று முறை இழுத்து விட்டான்.நெத்தியில் இருந்த வியர்வையை துடைத்தான்.
"டே பாலா எனக்கு ஒரு கனவு ...க...ன...வு வந்திச்சு டா ...பொன்னு காபியோட என் முன்னாடி வந்து நின்டா.நான் காபி எடுத்துட்டு அவளைப் பார்த்து சிரிச்சேன்.அப்ப...அப்ப..."
கொஞ்சம் எச்சிலை முழிங்கி விட்டு "அப்ப..அந்த பொன்னு பின்னாடி நா அன்னைக்கு பாத்த பேய் நின்னிட்டு ....என்னை பாத்து முறச்சது டா......பாலா ...பாலா ..வேனா டா ..திரும்பி போயிடலாம் டா எனக்கு பயமா இருக்கு டா..வேனா டா "

நான் அவள் இல்லைDär berättelser lever. Upptäck nu