பாலா ஒரு அறிமுகம்!

1K 101 21
                                    

"டே பாலா ,உன்கிட்ட ஒன்னு சொல்லலும் டா.யார்கிட்ட சொல்லுறது னு தெரியாம தவிச்சுகிட்டு இருக்கேன் " என்றான் அமர்.

"என்னடா அமர் உனக்கும் அதே பிரச்சனை தானா.நேத்து சரக்கு அடிச்சிட்டு நம்ம பட்டானி பொரியல் சாப்பிடும் போதே நினைச்சேன் இப்படி ஆகும் னு.ஒரே கேஸ் ட்ரபுள்.வா போய் மருத்துவச்சியைப் பார்த்துட்டு வருவோம் "

பாலா மிகவும் வேடிக்கையானவன்.அந்த கிராமத்து சந்தானம்.
அவ்வப்போது பெண்களிடம் பல்பு வாங்குவான்.வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.அமர் விரல் சூப்பும் காலத்திலிருந்து இன்று வரை இருக்கும் நண்பன் பாலா.

"டே ..அதுஇல்ல டா நேத்து நைட்டு
நா .....நா..."என்று தலையைக் குனிந்து நகத்தைக் கடித்தான் அமர்.

"டே என்னா டா .என்னாச்சு
மப்புல ஏதாசும் தப்பு கிப்பு பண்ணிட்டியா"

"அய்யோ இல்லடா நேத்து ராத்திரி நா பேயைப் பாத்தேன் டா.பயத்தில தேங்காயை வீசிட்டு வந்துட்டேன் டா."

அப்பொழுது திடீரென ஒரு பெண் சிரிக்கும் குரல் .பாலாவின் முன்னாள் காதலி ரியா அங்கே ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது அப்பொழுது தான் அவர்களுக்குத் தெரிந்தது .பாலாவிற்கு மட்டும் அவள் சிரிப்பது slowmotion இல் தெரிந்தது.பழைய காதல் நினைவுகள் அவன் மனதில் சிறகடித்தது.

"இதுக்கெல்லாம் ஏன்டா பயப்புடுற ?நான் லாம் பத்தாவது படிக்கும் பத்து பேயை நம்ம ஊர விட்டு விரட்டுனேன்.என்னோட ப்ரெண்டா இருந்திட்டு இப்படி பயந்தா எப்படி.வெளியில போய் என் ப்ரெண்டு னு சொல்லிறாத."
என்றான்.
பாலாவின் திடீர் திமிரு பில்டப் பேச்சிற்கு காரணம் ரியா தான் என்று புரிந்தது அமருக்கு.

"டே நீ பத்தாவது இங்க படிக்கலையே வெளியயூருல தான படிச்ச "என்றான் அமர் தன் இரு புருவங்களையும் இணைத்தபடி.

"அய்யய்யோ பாயிண்ட பிடுச்சுட்டானே "என்று முணுமுணுத்தான் பாலா.

"அத விடு டா முடிஞ்சுப் போன கதைய பேசிக்கிட்டு உன் கதையைப் பேசுவோம் "என்று மழுப்பினான் பாலா.

"சரி சொல்லு டா இப்ப என்ன பண்றது.இப்பலாம் மஞ்ச கலரைப் பாத்தாலே ஓடி ஒழியிறேன்.மல்லிகைப் பூவைப் பாத்தா மை டியர் குட்டி சாத்தானைப் பாக்குற மாரி பயமா இருக்கு டா.என்ன பத்தி தான் உனக்கு தெரியும் ல.அருந்ததி படம் பாதே 2 வாரம் தூக்கம் வராம கஷ்டப்பட்டேன் டா.அதெல்லாம் உனக்கு தெரியும் ல டா.எனக்கு மட்டும் ஏன் டா இப்படி "

"டே என்னாதுக்கு இவ்வளவு சீன் போடுற.என்னமோ நாளைக்கே அந்த பேய் உன் முன்னாடி வந்து நிக்க போற மாதிரி பேசுற "

எப்படியோ மனம் சிறிது லேசானது போல் இருந்தது அமருக்கு.வீட்டிற்கு நிம்மதியுடன் சென்றான்.

அவன் அம்மா "டேய் நாளைக்கு பொன்னு பாக்க போனும்.மறந்துடாத "என்றாள்.

"சரிம்மா " என்று சொல்லிவிட்டு படுக்கையில் விழுந்தான் அமர்.


ஹலோ!!! !! கதை ரொம்ப மொக்கையா போகுது நினைச்சிங்க னா comment பண்ணுங்க.பிடுச்சிருந்தா vote பண்ணுங்க.இது ஒன்னும் ரொம்ப கஷ்டமான வேலை இல்லயே.

உங்கள் ஓட்டு.                                           என் கதைக்கு ஊட்டச்சத்து!!

அதனால vote comment பண்ண மறந்துடாதிங்க.

நான் அவள் இல்லைWhere stories live. Discover now