நான் அவள் இல்லை

1.3K 131 80
                                    

அமருக்கு மரண பயம்.

"அமர் இன்னைக்கு தான்டா உன் வாழ்கையில கடைசி நாள்" காதருகே கூவினான் பாலா.
"போ போய் பேய் கிட்ட பேச்சுவார்த்த நடத்திட்டு வா.....sorry வருவியா னு தெரியல
உன் கல்லறைல ஏதாவது எழுதனும்னா....சொல்லிட்டு போடா"

பயத்தை வெளிக்காட்டாமல் சென்றான் அமர்.

அவள் அவனை மாடிக்கு அழைத்து சென்றாள்.

அவள் தான் ஆரம்பித்தாள் "என் மேல அன்னைக்கு...."

அவள் முடிப்பதற்குள் அவள் காலில் விழுந்தான் அமர் "தெய்வமே என்னை மன்னிச்சிடு...பயத்துல தெரியாம பண்ணிட்டேன்."

"பேய்க்கு தான் கால் இருக்காதே ...தேடிப் பாப்போமா "என்றது அவனுக்குள் ஒரு ஆர்வம்.

இப்ப ரொம்ப அவசியம் "என்று அந்த சிந்தனையை உதறி விட்டான்.

அவளோ "அய்யோ எழுந்திரிங்க .ப்ளீஸ்"என்றாள்.

"என்னா இந்த பேய் மரியாதை லாம் குடுக்குது "யோசித்தப்படியே எழுந்தான் அமர்.

"என்னை பேச விடுங்க .நான் பேய் லாம் இல்லை அதெல்லாமே acting "

"Acting ஆ "புரியாமல் முழித்தான் அமர்.

"ஆமா ,நா ரோட்டுல தனியா நடந்து போயிட்டு இருந்தேன்.பாதுகாப்புக்கு யாருமே இல்லை.என்னை காப்பாத்திக்க எனக்கு கிடச்ச ஐடியா இதுதான்.அதான் ,பேய் மாதிரி தலையை விரிச்சு போட்டுட்டு ..ரியாக்சன்லாம் பேய் மாதிரி குடுத்தேன்.உங்கள பாத்ததும் எனக்கு பயம் வந்துருச்சு ,நீங்க வேற என் பின்னாடியே வந்திங்களா...அதான் உங்கள ரொம்ப பயமுருத்திட்டேன்.நீங்களும் பயந்து ஓடிட்டிங்க .பேய் மாதிரி நா நடிச்சதெல்லாம் என்னை காப்பாத்திக்க தான் "

"எங்க உன் காலைக் காட்டு" என்றான் அமர் அசட்டு வழிய.

அவளும் காட்டிளாள்.

இதுக்கா இவ்வளவு பயந்தோம் என்று விழுந்து விழுந்து சிரித்தான் அமர்.அவளும் சேர்ந்து சிரித்தாள்.அப்பொழுது ஒரு மஞ்சள் துணி (அவன் மரத்தில் பார்த்த துணி )பறந்து வந்து அமர் முகத்தில் பட்டது .அதை கையில் எடுத்துப்பார்த்து விட்டு மறுபடியும் சிரித்தனர் ...இந்த முறை ...மன்மத பார்வையுடன்....



அவ்வளவு தான் கத முடிசஞ்சிடுச்சு.vote comment பண்ண மறந்துடாதிங்க.

நான் அவள் இல்லைWaar verhalen tot leven komen. Ontdek het nu