9

5.2K 171 5
                                    

     8 மணிக்குலாம் வீட்டுக்கு வந்துட்டோம்.. அப்பறம் சாப்பிட்டுட்டு மதிகூட கொஞ்சம் பேசிட்டு இருந்தேன்.. அப்ப தான் அவ கிட்ட நான் புது சிம்கார்ட் வச்சிருந்த கதையெல்லாம் சொன்னேன்.. அப்புறம்.. பூரி போட்டு சாப்பிட்டோம். ரொம்ப நாள் கழிச்சு என் மனசு ரொம்ப நிம்மதியா  இருக்கு. எல்லா பாரமும் குறைந்த மாறி இருக்கு..

    மகிழ்ச்சி..

   திரும்ப ராஜிக்கு , அவங்க அப்பா எல்லாத்துக்கு ஃபோன் பண்ணோம். பட் யாரும் எடுக்கல.. சரி டென்சன் லாம் குறைந்தப்புறம் அவங்களே ஃபோன் பண்ணுவாங்கன்னு விட்டுட்டோம்..

     அப்புறம் என்கூடவே அவளும் தூங்கிட்டா..

     காலைல எப்பவும் போல லேலைக்கு போயிட்டேன்.. நல்ல வேளை. அன்னைக்கு அவன் எங்கேயோ போயிட்டான்.. அம்மாக்கு மட்டும் சமைச்சிட்டு கடைக்குப் போயிட்டேன்..

      மதியை கொஞ்சம் வேற பிரான்ச் வரைக்கும் சூப்பர்வைசர் சார் அனுப்பிருந்தார்.. எனக்கு நேரமே போகல..

     மதன் வந்தான்.. சரி இனிமே எனக்கு போர் அடிக்காதுன்னு நினைச்சா.. அந்த படு பாவி பய என் தலையில இடிய போட்டுட்டான்.. நீங்க பெருசா யோசிக்கிற அளவுக்கு சீரியஸான விஷயம்லாம் இல்ல.. பட் ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்..சொல்றேன்..

மதன் வந்தான்..
" என்ன சாரதா , நேத்து பர்த்டே செலிபரேஷன் லாம் எப்படி போச்சு?? "

" ரொம்ப நாள் கழிச்சு நேத்து தான் சந்தோஷமா இருந்தேன். "

   " ஒரு சாக்கலேட் கூட குடுக்கலையே மேடம்.."

    " கொடுத்துட்டா போச்சு சார்."

    " எனக்கு சும்மா இந்த சாக்கலேட் லாம் வேண்டாம்.. . எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணா அது போதும்.. "

    " ஏதோ பெருசா கேக்கபோற போல.. சரி என்ன ஹெல்ப் சொல்லு.."

    " அது... சொன்னா கோச்சுக்க கூடாது.. ம்ம்ம்... எனக்கு மதி ஃபோன் நம்பர் தர்றியா??"

     ஒரே மூச்சா கேள்விய கேட்டு முடிச்சான்.. இத நான் எதிர்பாக்கலைன்னு நான் சொல்லுவேன்னு மட்டும் எதிர்பார்க்காதீங்க.. எனக்கு முன்னாடியே தெரியும் இந்த மாதிரி நடக்குமுன்னு.. சரி அவனே சொல்லுவான்னு வையிட் பண்ணேன்.. பட்.. இவளோ சீக்கிரம்.......!!!! பரவாயில்ல.. நம்ம ஃபிரன்ட்க்கு லைப் நல்லா இருக்கப்போதுன்னா சந்தோஷம் தானே படனும்..

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now