கேட்கமறுத்த செவிகள்

175 5 12
                                    

மெள்ள புகைமூட்டம் புடை சூழ்ந்தது அது விலக வெகு நேரம் ஆனது அதற்குள் நம்மவன் அங்கலாய்த்து தீர்த்துக்கொண்டான். அந்த புகை மண்டலம் சற்றே விலக எத்தனித்தது பொறி பறக்க நெருப்பின் ஜுவாலை தெரிந்தது துளசியின் வாடையுடன் நெய்யின் நறுமணமும் கலந்து  மூக்கை துளைத்தது இட்லிகள் கமகமவென ஆவியை பரவவிட்டது, ஆழ பொறிந்த தோசைகள் நெய்யை சொட்டி கொண்டிருந்தன, வறுத்த கொட்டை பொடியின் இடுக்குகளில் சிக்கரி தன் மணத்தை சிதற விட்டது குறிப்பாக பொன்னிற அப்பங்கள் தேனை கக்கி கொண்டிருந்தன அந்த நாரயண வாடை  ஒருவாறு அவனை பாற்கடலில் மூழ்க செய்தது ஆனால் எந்த வித சலனமுமில்லாமல் அங்கே கிடத்தப்பட்ட பலகையின் முன்னேரத்தில் உட்கார்ந்து சௌகர்யத்துடன் சப்பு கொட்டி மணி கடை காப்பியை குடித்து கொண்டிருந்தார் நம்ம சீனிவாசனை பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போனான் நம்மவன்.

"அட பகவானே" என தலையில் அடித்துக்கொண்டே பெருமாள் கோயிலை நோக்கி நடந்தான் வழிபோக்கன். அவனை நேருக்கு நேர் முட்டுவதை போல 
துளசியையும் நெய் பொங்கலையும் கைகளில் ஏந்தியபடி ஆழிலையில் எழுந்து ஓடி வந்த கண்ணனை போல சீனிவாசனை நோக்கி ஓடி வந்தான் பாரதி "சீனி தாத்தா! இந்தாங்க" என்று இரண்டு கைகளையும் நீட்டினான். பொங்கலை எடுத்து கொண்டு காப்பி டவராவை பாரதி கைகளில் வைத்தார் சீனிவாசன், அதனை பவ்யமாகவே ஏந்தி கழுவி மணியிடம் கொடுத்தான்.

"டேய் தம்பி, இந்தா இத போய் சிவராமன் ஐயர்ட்ட கொடுத்துட்டு வா" என நான்கு நெய் அப்பத்தை வாழையிலையில் மடித்து கொடுத்தான் மணி.

அதை வாங்கி கொண்டு துள்ளி குதித்து ஓடினான் பாரதி. அவன் ஓடும் அழகை அவ்வளவாக ரசிப்பதற்கில்லை அவன் அணிந்த பனியனில் அவன் மொத்த மச்சங்களையும் எண்ணிடலாம் அவன் அணிந்திருந்த டவுசரில் தான் எத்துனை நிறங்கள் அது ரசிப்பதற்குறியதாகுமா என்ன!.

சூரியன் இப்போது சஞ்சாரம் செய்ய தொடங்கிவிட்டான். சீனிவாச அய்யங்காருக்கோ ஒரே படபடப்பு.

மீட்டாத வீணைWhere stories live. Discover now