பாகம் - 1

315 9 9
                                    

இந்த கதைக்கு ஹீரோ யார்னு நான் சொல்ல போறதில்ல இது ஒரு நெடுந்தொடர் இதுல உங்களுக்கு யாரை பிடிச்சாலும் ஹீரோவா வச்சுக்கோங்க. இந்த கதைய நைனப்ப பிள்ளைக்கும் குலசம்மாளுக்கும் மூணாவது பிள்ளையா சித்திரை மாசம் 1964 ஆவது வருஷம் april 29 பொறந்த சொக்கலிங்கங்கம்/ சொக்கன் கிட்ட இருந்து ஆரமிப்போம். சொக்கன் கூட பிறந்தது அஞ்சு பேர்
அக்கா - கேந்திரம்
அண்ணன் - ஆறுமுகம்
முதல்தம்பி - நல்லமுத்து (சட்டு)
இளையதம்பி - சட்டநாதன் (சட்டு)
தங்கை - சித்ரா (பிறந்த கொஞ்ச நாள்ல செத்துபோச்சு)
ஆம்பள புள்ள போறந்துருக்கு பேர் வைக்கணும்னா அந்த காலத்துல அப்பா பேர் தானே முதல்ல பரிந்துரைக்க படும் அப்படி குலசம்மாளோட அப்பா பேரான சொக்கலிங்கம் பிள்ளையோட பேர் தான் இவனுக்கு வச்சிருக்காங்க. (அப்போ நைனப்ப பிள்ளை அப்பா பேர வைக்களையான்னு நீங்க கேக்குறது புரியுது அதை அடுத்த பயனுக்கு வச்சிட்டாங்க அதான் நல்லமுத்து பிள்ளை) சொக்கன் விளையாட்டு பிள்ளை ஆனாலும் சேட்டை கம்மி கொஞ்சம் அதிகமா பேசுவான் ஆனா அவன் பேச்சு ரசிக்கிற மாதிரி இருக்கும் எப்பவும் துரு துரு னு சுட்டி தனம் பண்ணினாலும் அம்மாவுக்கு செல்ல பிள்ளை இவன்தான் (அம்மா வோட அப்பா பேர் ஆச்சே பாசம் இருக்காதா). அக்காவுக்கும் இவனுக்கும் 5 அல்லது 6 வருஷம் விதயாசம் அண்ணனுக்கும் இவனுக்கும் 3 வருஷம் வித்யாசம் மிதல் தம்பியும் அதே மாதிரி 3 வருஷம் வித்யாசம் ரெண்டாவது தம்பி 5 அல்லது 6 வருஷம் வித்யாசம். அதனால அக்காவும் இவனுக்கு அம்மா மாதிரி தான் ஆறுமுகமும் அமைதியான விட்டு கொடுத்து போற குணம் முதல் பையனா தன் பொறுப்பை உணர்ந்து தம்பிமேலயும் அக்கா மேலையும் பாசம் அதிகம் முத்து தான் வீட்டுக்கு வாலு எல்லாமே உடனே நடக்கணும்னு பிடிவாத குணம் கோபமும் அதிகம் வரும் சட்டு இப்படி ஒருத்தன் அந்த வீட்ல இருக்கானானே தெரியாது அவ்ளோ அமைதி. சொந்த ஊர் நம்ம குத்தாலம் பக்கத்துல ஒரு சின்ன கிராமம். எல்லா குழந்தைங்க மாதிரியும் நல்லா தான் போச்சு அவனுக்கும்(சொக்கனுக்கு) குழந்தை பருவம் நல்லா தான் படிச்சான் ஆனா அப்பா ஒரு சூதாடி அவங்க அப்பாவுக்கு (சொக்கனோட தாத்தா) ஒரே பையன் 4 பொண்ணு அதனால செல்லமா வழந்த புள்ள. சூதாடியே இருக்குற நிலத்தையெல்லாம் விக்க வேண்டியதா போச்சு. கடன் வர ஆரமிச்சது அதனால வீட்டை காப்பாத்த ஏதாச்சும் பண்ணனும்னு 7ஆம் வகுப்பு வரை படிச்சிட்டு அதுக்கு மேல படிக்காமல் எல்லாரையும் சிவகாசிக்கு கூட்டிட்டு போய்ட்டான் ஆறுமுகம் அங்க தீப்பட்டி தொழிற்சாலைல வேலை செஞ்சு குடும்பத்தை காப்பாத்த குலசம்மாளும் தன் குழத்தொழிலான உணவு விடுதி நடத்த ஆரமிச்சா நைனப்ப பிள்ளையும் கொஞ்சம் உதவ நல்லா தான் போய்க்கிட்டு இருந்துச்சு அவங்க வாழ்க்கை ஆனா ஆடினா காலும் பாடினா வாயும் சும்மா இருக்குமா வேதாளம் முருங்கமரம் ஏறின மாதிரி மறுபடியும் சூதாட்டதுக்கு போய்ட்டாரு நைன்னப்ப பிள்ளை. என்ன செய்றது மறுபடியும் கஷ்டம் கடன் வாரம பாத்துக்கணுமேன்னு அப்போ 7 படிச்ச சொக்கனையும் வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் அவனும் அண்ணன் கூட தீப்பட்டி தொழிற்சாலைக்கு போக ஆரமிச்ச அப்பறம் கொஞ்ச நாள்ல மறுபடி சகஜமாச்சு குடும்பம். ஆனா சொக்கனுக்கும் ஆறுமுகத்துக்கும் தன் குழந்தை பருவம் 7 ஆம் வகுப்புலயே முடிஞ்சி போச்சு என்ன பண்றது குடும்ப கஷ்டம் போக்க வேண்டுமேன்னு அவங்களும் வேலைக்கு போய்ட்டாங்க. கேந்திரத்தை காணுமேன்னு நீங்க கேக்குறது புரியுது 4 ஆம் வகுப்பு படிக்கிறப்பவே பொட்ட புள்ளைக்கு எதுக்குட்டி படிப்பு ஒழுங்கா அம்மா கூட இருந்து வேலைய கத்துக்க னு சொல்லிட்டாரு நைனப்ப பிள்ளை. அவளும் தன்னோட பங்குக்கு அம்மாவுக்கு உதவி பண்ணி சமையல் வேலை பாத்திரம் கழுவுறதுன்னு எல்லாத்தயும் கத்துகிட்டா. இப்படியே நாட்கள் கொஞ்சம் கடந்து போச்சு நைனப்ப பிள்ளை சூதாட்டத்தை விடல ஆனாலும் பசங்களும் குலசம்மாளும் சம்பாதிக்கிறது போதுமானதாக இருந்துச்சு. எட்டாம் வகுப்புக்கு முடிச்ச முத்து மேல படிக்கணும்னா 8 மைல் நடந்து போய் படிக்கணும்னு வேண்டாம்னு படிப்பை நிறுதிக்கிட்டான். சரி அதுவும் நல்லத்துக்கு தான் கேந்துரத்துக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு (ஆமாங்க இப்போ அவளுக்கு வயசு 21 ஆகிடுச்சு) இவான் சம்பாதிச்சா அவளை கட்டி கொடுக்க கஷ்டம் இருக்காதுன்னு அவனையும் வேலைக்கு அனுப்பீட்டாங்க. கேந்துரத்துக்கு அடுத்த வருஷமே கல்யாணம் மாப்பிள்ளை குலசம்மாளோட கடைசி தம்பி கதிர்வேல்முருகன்(முருகன்) னுக்கு கட்டிவச்சாச்சு அவரும் குழத்தொழிலான உணவு விடுதி தான் நடத்துனாறு ஆனா ராமநாதபுரம் எனும் ராம்நாட்டுல தன் மனைவி கேந்திரத்தையும் அங்க கூட்டிகிட்டு போய்ட்டாரு அங்க அவங்களுக்கு நல்ல வருமானம் இந்த நிலையில பசங்களும் நல்லா வளந்து பொருப்பா வேலை செஞ்சு குடும்பத்தை பார்க்க சில மாதம் சென்றது கேந்திரம் மாசமாகி வலைகப்புக்கு வர போற நிலைமை பொண்ணு வர சந்தோசம் இருந்தாலும் வலைகாப்பை சொந்த ஊர்ல வைக்க தானே விரும்புவாங்க மறுபடியும் வேலையெல்லாம் விட்டுட்டு ஊருக்கு போய்ட்டாங்க கேந்திரமும் வீட்டுக்கு வந்தாச்சு இருக்குற கொஞ்ச நஞ்ச காசையும் போட்டு வலைகாப்ப சிறப்பா முடிச்சாச்சு பசங்க மட்டும் கெடச்ச வேலையை பார்த்துகிட்டு இருந்தாங்க உணவு விடுதி இல்லாததால் காசு காலை கடிக்கும் நிலை வேறு வழியின்றி கடைசி பிள்ளையையும் வேலைக்கு அனுப்பி வச்சாங்க ஆனாலும் நைனப்ப பிள்ளை கொஞ்சம் சூதாட்டத்தை விட்டிருந்தார் தன் மனைவி வழி வந்த காட்டில் நெட்பயிரிட்திருந்தார். இப்படியே ஒரு மாதம் செல்ல கேந்திரத்திரத்துக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அதர்க்கு கேந்திரம் தன் அம்மா பெயரையே வைத்து விட்டால் குலசுமுத்து(குணா) குழந்தை பிறந்த நேரம் முருகனுக்கு நல்ல வருமானம் அதனால் ஓரிரு மாதத்தில் உதவிக்கு மனைவியை அழைத்துக்கொண்டார்.

_தொடரும்

என் சோக கதையை கேளு தாய்குலமேWhere stories live. Discover now