பாகம் - 2

294 5 16
                                    

முதல் பாகத்துக்கும் இதுக்கும் சம்மந்தமில்லாத மாதிரி இருக்கும் ஆனா சம்மந்தம் இருக்கு. இந்த பாகத்துல முத்துகருப்பனுக்கும் சரோஜாவுக்கும் ரெண்டாவது மகளா sep-5-1967 ல பிறந்த அரசு பத்தி பாக்க போறோம். ஏற்கனவே சொன்ன மாதிரி அரசு இரண்டாவது மகள் அவங்களுக்கு ஒரு அக்கா ஒரு தம்பி அக்கா பேரு குலசுமுத்து (அப்பா வழி கடவுளின் பெயர்), அடுத்தது அரசு (அம்மா வழி தாத்தாவின் பெயர் அரசப்பபிள்ளை சுருக்கி அரசுன்னு வச்சிட்டாங்க), கடைசியா ஜெய்சங்கர் (கடவுள் பெயரே வச்சிட்டாங்க). இவளுக்கும் குழந்தை பருவம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு 10 வயசு வர அதுவரை இப்போதுள்ள tom boy போல attrocities பண்ணிக்கிட்டு குறும்பு செஞ்சு திட்டு வாங்குறது தான் வேலை, எல்லா பெண்களை போல் அப்பாவின் செல்லம், கொஞ்சம் அதிகமாவே பேசுவா அவங்க அம்மா வழி பாட்டி கிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணி திட்டு வாங்கலன்னா தூக்கமே வராது பாட்டி என்னதான் திட்டினாலும் தன்னோட புருஷன் பேர் வச்சிருக்குறதால ரொம்ப பாசமா பாதுக்கும் சரோஜாவுக்கு 4 அக்கா ரெண்டு தம்பி அந்த ரெண்டு தம்பிக்கும் அரசுன்னா உயிர், சொந்த ஊர் குற்றாலம் பக்கத்துல ஒரு அழகான கிராமம் தான், தண்ணி எடுக்கணும்னா கூட ஆத்துக்கோ குலத்துக்கோ ஊர் பொது கெனத்துக்கோ தான் போகணும், அக்கா கூட போய் தண்ணி கொடத்த தூக்க சொல்லி தூக்க மாட்டேன்னு சண்டை போட பிடிக்கும், ஆனால் கல்வியில் மந்தம் just pass category தான் கையெழுத்து அவளோட வருங்கால தலை எழுத்து மாதிரி தான் எங்காக்க போகுது என்ன இருக்கு ஒன்னும் புரியாது, இப்படி வாழ்க்கை சந்தோசமா போகும் போது, நம்ம முத்துகருப்பன் ஒரு வேளை விஷயமா கேரளாவுக்கு போக அவளால பொறுத்துக்க முடியல வேண்டாம்னு அழுதா ஆனா அவங்க அம்மா பாவம் நடக்க போறது தெரியாம அவரை சந்தோசமா வழி அனுப்பிச்சாங்க. ஆனா போனவர் ஒரு மாசம் ஆச்சு ரெண்டு மாசம் ஆச்சு அப்படி இப்படின்னு ஒரு வருஷமே ஆச்சு ஆனாலும் வரல, என்ன ஆச்சு தான் ஆச்சு என் கணவருக்கு இப்படி இத்தனை நாள் ஆகியும் ஒரு தகவல் கூட இல்லாம புள்ளைகல வந்து பாக்காம இருக்காரேன்னு ஏதும் விபரீதமா ஆகிடுச்சோ, என்கிட்ட பேசமா கூட இருந்துடுவாறு ஆனா புள்ளைகல பாக்காம பேசமா இருக்க மாட்டாரே நெனச்சிக்கிட்டு அவரை தேட சொல்லி தன்னோட ரெண்டாவது தம்பி கிட்ட சொல்றார் சரோஜா முதல் தம்பி வேலை விஷயமா வெளிநாட்ல இருக்காரு ரெண்டாவது தம்பி அரசியல் ல சேந்து இருந்தாலும் பெற்றோர்களோட வயல் வேலையும் பாத்துக்கிட்டு ஊர்ல தான் இருக்காரு. அக்கா பேச்சை தட்டமுடியாமல் கேரளா சென்று தேடுகிறார் ஒருமாத காலத்தில் கண்டும் பிடிக்கிறார் ஆனால் அவர் அங்க பார்த்த கேட்ட விஷயம் அவருக்கு பயங்கரமான அதிர்ச்சியையும் கோவத்தையும் தரவே அவரோட தேடலை முடிச்சிக்கிட்டு ஊருக்கு போறாரு, ஆனா தான் கேட்ட விஷயம் பாத்த விஷயத்தை எப்படி தன் அக்கா கிட்ட சொல்றது சொன்னா ஒருவேளை அதிர்ச்சியில விஷத்தை குடிச்சாலும் குடிச்சிடுமே அவளை நம்பி மூணு பேர் இருக்காங்களே னு யோசிச்சிகிட்டே வீடு வந்து சேருறார், அந்நேரம் மூணு புள்ளைகளும் பள்ளிக்கு போயிருக்க சரோஜாவும் வயலுக்கு போயிருக்கா அம்மா கூட. இவர் வந்த களைப்புல தூங்கலாம்னு படுத்தா தூக்கம் வரல எப்படி அக்காவை சமாளிக்கிறதுன்னு தான் யோசனை இருந்ததது. மாலை நேரம் வர சரோஜா வேலை முடித்து வர அரசு மட்டும் குழந்தைகளுடம் விளையாட சென்று விட மத்த இருவரும் வீடு வந்து சேர அப்போது தான் அனைவருக்கும் தெரிந்தது சரோஜாவின் தம்பி வந்தாச்சுன்னு, நல்ல செய்தி தான் வந்துருக்கும்னு நம்பி தம்பி தம்பி னு சொல்லிகிட்டே போற சரோஜாவுக்கு அப்போ தெரியல அவர் பெரிய குண்ட தூக்கி போட போறாருன்னு. சரோஜா அங்க போக அவர் அப்போ தான் அசந்து தூங்க ஆரமிச்சிருக்காறு. உடனே சரோஜா போய் தம்பிக்கு காப்பி போட்டு எழுப்ப, அவர் காப்பியை வாங்காம தன் அக்காவை பார்த்து அழ ஆரமிக்கிறாரு. சரோஜாவுக்கு இருப்பு கொள்ள முடியல அவங்க அப்பா இறந்தப்ப அழுதது தம்பி அதுக்கு முன்னாடியும் சரி பிண்ணாடியும் சரி இப்படி அவர் அழுததில்லை ஏதோ ஆகிடுச்சோன்னு பதிரி போய் தம்பி கிட்ட கேட்க, உன் வாழ்க்கை இப்படி நாசமாகிடுச்சே அக்கா னு சொல்லி அழராறு. தம்பி என்னடா சொல்ற அவருக்கு ஏதும் ஆகிடுச்சா ஏதும் ஆதி பட்டுட்டுச்சா இல்ல இறந்து ஏதும் போய்ட்டாரனு கேக்க அடுத்து அவர் சொன்ன விஷயம் அந்த குடும்பத்துக்கு இடியா வந்து இறங்குச்சு. சரோஜா என்ன பேசுறதுன்னு தெரியாம கள்ளு மாதிரி பிரம்மை புடிச்சு உக்கார அப்போ வந்த அவ புள்ளைகளை பாத்து கதறி கதறி அழறா, என்ன ஆச்சு அம்மா ஏன் அழறீங்க ன்னு கேக்க அப்போ தான் அரசு வீட்டுக்கு வரா, வரும்போதே வழில போராவரு ஏட்டி ஒங்க மாமா வந்தாச்சுன்னு சொல்ல அவ மாமாவையும் அப்பாவையும் பாக்குற ஆசையில ஓடி போரா அங்க ஒரே அமைதி, மாமா மாமா எப்போ வந்தீங்க அப்பாவ எங்க அப்பா அப்பா, என்ன மாமா அப்பா வரலையா உங்க கூட என்று சோகமா கேக்க, அவர் அழுத்துகிட்டே நடந்ததை சொல்றாரு அதை கேட்ட அரசு மயக்கம் ஆகி விழுந்துடுறா (as a writtera இந்த கதைல பின்னாடி நடக்க போற ஒரு விஷயத்தை கொஞ்சமா இப்போ லீக் பண்றேன் இந்த அரசு இருக்காலே பிற்காலத்துல மனஅழுத்தம் காரணமா சித்த பிரம்மை புடுச்சு எதுவுமே சுயமா செய்ய முடியாத நிலைமைக்கு உள்ளாக போரா அதற்கான முதல் அடி இந்த மயக்கம்).

அப்படி என்ன தான் டா நடந்துச்சு சொல்லி தொலையேன் பல்ஸ் எகுருதுன்னு நீங்க கேக்குறது புரியுது அவங்க மாமா என்ன சொன்னாரு கேரளாவில என்ன தான் நடந்துச்சு
இதை தெரிஞ்சுக்கணும்னா நீங்க அடுத்த பாகம் வரை வெய்ட் பண்ணி தான் ஆகணும், அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் போண்டா 👋👋

என் சோக கதையை கேளு தாய்குலமேWo Geschichten leben. Entdecke jetzt