பாகம் - 3

114 3 21
                                    

(பாகம்-1 ன் தொடர்ச்சி) நாட்கள் மெதுவாக நகர தொடங்கின முருகன் மற்றும் கேந்திரத்துக்கு இரண்டாவது குழந்தை அதுவும் பெண் குழந்தை பிறந்தது. அந்நேரம் புதுவை நகருக்கு செல்லலாம் அங்கே அனைவரும் ஒன்றாகவே வசிப்போம் எனக்கு தெரிஞ்ச நண்பர்கள் இருக்காங்கன்னு முருகன் சொல்ல குலசுமுத்தும் நைனப்ப பிள்ளையும் மத்த பிள்ளைகள் எல்லாத்தையும் கூட்டிக்குட்டு புதுவை(புதுச்சேரி (அல்லது) பாண்டிச்சேரி) மாநகரத்துக்கு போக அங்கே சில நண்பர்களின் உதவியுடன் ரேணுகா theatre அருகில் குணா கபே என்ற பெயரில் கடை தொடங்கினார் முருகன் அங்க போன உடனே புள்ளைக்கு அந்த ஊர் அம்மன் பெயரான ரேணுகாதேவி என்ற பெயரையே வச்சாறு முருகன், அங்கே தனது மைத்துணர்களையும் வேலைக்கு வச்சிக்கிட்டார், வியாபாரம் அமோகமா இருக்க குலசு முத்துவுக்கும் ஒரு தனி கடை வச்சு கொடுத்தார் முருகன், இந்த. நேரத்துல தான் ஆறுமுகத்துக்கு பொண்ணு பாக்க ஆரமிச்சாங்க என்ன தான் பொழைப்பு தேடி வெளி ஊருக்கு வந்தாலும் சொந்த ஊர்ல தான் பொண்ணு பாக்கணும்னு கறாரா சொல்லிட்டாங்க குலசு முத்து, சொந்த ஊர்லயே ஒரு அழகான பொண்ணா பாத்து கட்டி வைக்க ஒரு வருஷம் நல்லா தான் போச்சு வாழ்க்கை, ஆனா விதி யாரையும் ரொம்ப நாள் சந்தோசமா வைக்கிறதில்லையே கட்டி வந்த பொண்ணு நடத்தை சரி இல்லை வேற ஒருத்தர் கூட ஓடி போயிடுச்சு, ஆறுமுகம் மொத்தமா உடஞ்சு போக என்ன செய்றதுன்னு யாருக்கும் தெரியல அவர் வாழக்கை நல்லா இருக்கணுமேன்னு இன்னொரு பொண்ண கட்டிவச்சாங்க ஆறுமுகத்துக்கு அதுவும் சொந்த ஊர் பொண்ணு தான் ஆனா நெருங்கின சொந்தம் அதனால அவங்களும் ஆறுமுகத்தை கட்டிக்கிட்டு நல்லா பாத்துகிட்டாங்க மறுபடி ஆறுமுகம் வாழ்க்கை சீராச்சு. எல்லாம் சரியா போய்கிற்றுக்க நேரத்துல கேந்திரத்துக்கு மூணாவது குழந்தை கருவாகிடுச்சு அவள் இல்லாததனால கடையை அடைக்க வேண்டிய நெலமை அவள பாத்துக்க அம்மா குலசு முத்துவும் வீட்ல இருக்க வேண்டிய நெலமை அதனால அவங்க கடையும் பாக்க கஷ்ட பட்டாங்க, இந்த நேரத்துல என்ன செய்றதுன்னு தெரியாம தன்னோட மகன்களை தெரிஞ்ச ஒருத்தரோட லாட்ஜ்ல வேலைக்கு சேர சொல்ல, ஆறுமுகத்துக்கு சுப்பர்வைசர் வேலையும், சொக்கனுக்கு ரூம் பாய் வேலையும் கிடைச்சது. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் அந்த வேலை தெரியாதுன்றதால அவங்க ஆரம்ப நாட்கள் ரொம்ப கஷ்டமா போச்சு ஆனா போக போக அதை பழகிகிட்டாங்க, கேந்திரத்துக்கு மூணாவது குழந்தை பிறந்துச்சு அதுவும் பெண் குழந்தையா பிறந்துருச்சேன்னு குலசுக்கு வருத்தம் ஆனாலும் முருகன் அதுக்கு வருத்த படல தன்னோட அம்மா பிறந்துருக்காங்கன்னு சந்தோஷ பட்டார் ஏன்னா அவ பிறக்குறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் அவங்க இறந்து போய்ட்டாங்க, அதனால புள்ளைக்கு முத்துலட்சுமி னு அம்மா பேரையே வச்சி சந்தோஷ பட்டாரு முருகன் (ஆனா அந்த குழந்தையால தான் தன்னோட சந்தோஷமே போக போகுதுன்னு அவருக்கு அப்போ தெரியாது). ஆறுமுகம் கல்யாணம் ஆனாலும் வீட்டை விட்டு பிரிய மனம் இல்லாம கூட்டு குடும்பமாவே வாழ்ந்தாங்க, முப்பிடாதியும் (ஆறுமுகத்தின் சம்சாரம்) ஆறுமுகம் மாதிரியே அனுசரிச்சு போற குணம் தான் ஆனா வாய் மட்டும் கொஞ்சம் அதிகம், என்ன தோணினாலும் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடும். என்ன தான் புருஷன் கிட்ட வாதாடினாலும் வீட்டை பிரிக்க அவளுக்கும் மனசில்ல அதனால அவளும் அவங்க கூட சேந்து வாழ பழகிட்டா, மறுபடி வாழ்க்கை சீராச்சு முருகன் கடையும், குலசு கடையும் சீரா நடக்க ஆரமிச்சதும் ஆறுமுகம் சம்பாத்தியமும் சொக்கு சம்பாத்தியமும் மிச்சம் ஆக ஆரமிச்சது அதை உங்க வருக்காலத்துக்காக சேத்து வச்சுக்கோங்க ன்னு அம்மா சொல்ல ரெண்டு பேரும் அதையே செஞ்சாங்க, இந்த நேரத்துல தான் முத்து தனக்கு தனி கடை வேணும் என்னால இவங்க கூட இருந்து வேலை பார்க்க முடியாது ன்னு சொல்லிட்டான் (அதுவரை அம்மா கடையை பாத்துகிட்டது முத்து தான்). குலசு முத்து எவ்ளோ சொல்லியும் அவன் கேக்கல சரி னு அவனுக்கு சென்னைல   ஒரு கடையை வச்சு கொடுத்து, அங்க இருந்த ஒரு அத்தையை (நைனப்ப பிள்ளையின் தங்கையிள் ஒருவர்) பாத்துக்க சொல்லி ஒப்படச்சிட்டாங்க (அந்த அத்தை யாரு என்னனு பின் வரும் காலத்துல சொல்றேன்). அவன் தனியா போய்ட்டாலும் கடைக்கு தேவையான வேலைய குலசு முத்துவே பாத்துகிட்டதால நல்ல வருமானம் வர ஆரமிச்சது. இந்நேரம் தான் குலசுக்கு ஒரு எண்ணம் வந்துச்சு சொக்கன் லாட்ஜில் ரூம் பாயாக வேலை பார்க்கிறான் இவனுக்கு யார் பொண்ணு கொடுப்பாங்க இவனை வேர ஏதாவது நல்ல தொழிலுக்கு அனுப்பனும் அப்ப தான் இன்னு 5 அல்லது 6 வருஷத்துல அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும் னு நெனச்சி தன்னோட மூத்த அண்ணன் ராமசாமி ஊர்ல வச்சிருக்க ஸ்டூடியோவுக்கு வேலைக்கு அனுபலாம்னு எண்ணம் வருது. ராமசாமி க்கு மூணு பசங்க ஒரு பொண்ணு பொண்ணு மேல சொக்கனுக்கும் ஒரு கண்ணு, மாமாக்கு பொண்ணு இருந்து நம்ம வயசோட ஒத்து போற மாதிரி இருந்தால் எல்லா பையனும் கண்ணு வைக்க தானே செய்வான், சொக்கன் மட்டும் விதி விளக்கா என்ன, அம்மா சொன்னதும் சரி னு சொல்லி சந்தோசமகிட்டான் அவன்.

அங்க போனானா இல்லையா என்னதான் ஆச்சு நம்ம சொக்கன் காதல் என்ன ஆச்சு எல்லாம் பின்னாடி பாப்போம் இப்போதைக்கு வணக்கம் சொல்லி விடை பெறுகிறேன் டாட்டா 👋👋👋...

You've reached the end of published parts.

⏰ Last updated: Dec 11, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

என் சோக கதையை கேளு தாய்குலமேWhere stories live. Discover now