இனிதொரு துவக்கம்

508 45 60
                                    

"ஆரண்யா...சீக்கிரம் வா...இன்னும் கொஞ்சம் நேரத்துல கடைய மூட போறாங்க..."

"இருங்க பா இன்னொரு ட்ரெஸ் மட்டும் செலக்ட் பண்ணிட்டு மொத்தமா பில் கட்டிடலாம்"

"என்ன பாவனா ஆரு இங்க இருக்குற நாமக்கல் ல தானே படிக்க ஹாஸ்டல் போறா... என்னமோ வேற கிரகத்துக்கு பேக் அப் பண்ணிட்டு போற மாரி திங்ஸ் வாங்கிட்டு இருக்கா
"

"முதல் தடவை ஹாஸ்டல் போறா... பிடிச்சத வாங்கிக்கட்டும் விடுங்க"

"தேவையானதை வாங்குனா போதும் பிடிச்சதெல்லாம் வாங்கனுமா என்ன!"

"விடுங்க ஜெய்...எப்படியோ நாமக்கல் ல லெவெந்த் படிக்க ஒத்துகிட்டதே பெருசு...இதுல நீங்க வேற அதை வாங்காத இதை வாங்காத னு அவள அப்செட் பண்ணாதீங்க" சற்று கட்டமாகவே வந்த பதில் ஜெய் எதிர்பார்த்ததுதான்.

"எல்லா ஷாப்பிங் உம் முடுஞ்சுது ல மா...வேற ஏதும் தவற விட்டுட்டேனா?"

"இல்லாடா ஆரு குட்டி...இப்போதைக்கு வாங்கியாச்சு...அங்க போன அப்றம் எது வேணுமோ பாத்து வாங்கிக்லாம் சரியா?"

"ஹ்ம்ம்...சரி மா...இன்னும் ஒரு நாள் தான் உங்களோட இருக்க முடியும்... அப்றமா நான் ஹாஸ்டல் போயிடுவேன்...உங்களுக்கு ஜாலி தான்... தனியா இருப்பீங்க"

"ஆரண்யா...என்ன இப்டி எல்லாம் பேசற...நீ டென்த் ல கம்மியா வாங்கினாலும் இப்போ சேர போற ஸ்கூல் என்ட்றன்ஸ் ல நல்ல மதிப்பெண் எடுத்து நிறைய பேர் வாங்க முடியாத சீட் அஹ் நீ வாங்கிர்க்க...அந்த மாரி ஸ்கூல் ல எல்லாம் ஹாஸ்டல் ல இருந்து படிச்சா தான் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும் னு எல்லாருமே சொல்றாங்க...நீயும் யோசிச்சு தானே டா ஒத்துகிட்டே..."

"ஆம்மா கண்ணா... இப்படி எல்லாம் பேசுனா கஷ்டமா இருக்குல்ல" என்ற மனையாளின் பார்வையை ஏற்று சாலையின் மறுபுறம் அமைந்திருந்த உணவு விடுதியை நோக்கி வாகனத்தை செலுத்தினார் ஜெய்.

இனிமேல் இப்படி அடிக்கடி பிடித்ததை உண்ண முடியாத காரணத்தினால் இம்முறை வகைவகையான உணவுகளை உண்டு களித்தாள்,அன்னை தந்தை யின் சமாதான சம்பாஷனைகளுக்கிடையில்...

ஆரண்யாWhere stories live. Discover now