வேண்டிய இடம் சேர்ந்து...

339 27 54
                                    

"எல்லாமே கனவு மாரி இருக்கு சனா" என்ற ஆரண்யா வை வினோதமாக பார்த்தாள் அவள் தோழி.

"என்னாச்சு திடீர்னு உனக்கு...நாளைக்கு இன்டெர்னெல் கு படிக்காம கனவு கண்டுட்டு இருக்கே"-சனா

"ஹாஹா...இப்போதான் ட்வெல்த் முடிச்ச மாரி இருக்கு ஆனா பாரு,இப்போ நம்ம காலேஜ் வந்து முதல் இன்டெர்னலே எழுத போறோம்... ரொம்ப சீக்கிரமா நேரம் கரையிது ல"

ஆம்...ஆரண்யாவின் நல்லதொரு மதிப்பெண் அவளுக்கு
மருத்துவப்படிப்பிற்கு ஏற்ற கட் ஆபை வங்கிக்கொடுத்தது.இதன் விளைவாக தமிழ்நாட்டு அரசு மேற்பார்வையில் நடக்கும் அரசு மருத்துவகல்லூரிகளில் ஒன்றிலேயே ஓர் இடம் பெற்றாள்.

மதிப்பெண் தெரிந்தவுடன் அவள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.அவளும் சரி அவள் பெற்றோரும் சரி,மிகவும் ப்ராயத்தனப்படு அவளை படிக்க வைத்ததற்கு அவர்களுக்கு 'என் மகள் ஒரு டாக்டர்' என்ற பெருமை பரிசளிக்கப்பட்டிருந்தது.யாருக்குத்தான் மகள் பெருமை பாட பிடிக்காது!!அதுவும் பெண்ணை நாமக்கல்லில் படிக்க வைக்கிறார்கள்,என்ன மதிப்பெண் வாங்கியிருக்கிறாள் பார்க்கலாம் என வீம்பிற்கு வினவும் உறவினர்களிடம்!!!

கவுன்செலிங் அறைக்கு செல்லும் முன்பாகவே அனைத்து உறவினர்களுக்கும் விடயம் தெரிந்துவிட...மதிப்பெண் கேட்டு தொல்லைப்படுத்தும் முகம் தெரியாத அத்தைக்கள்-மாமாக்கள் பின்பு வாயடைத்துபோய்விட்டனர்.ஆரண்யாவின் மதிப்பெண் அவள் வயதுடைய மற்ற உறவினர் குழந்தைகளை விடவும் மிக அதிகமாக இருந்ததில்,காடுகள் எரியுமலவிற்கு தீப்பற்றி எரிந்தது சிலருடைய சோற்றுப்பைகள் (அதாங்க...வயிற்றெரிச்சல்)

கவும்செலிங்கிலும் நல்ல காலேஜ் கிடைத்துவிட கல்லூரி துவங்க ஓரு மாத காலமே இருந்த பட்சத்தில் பெற்றோருடன் இன்னும் சில ஊர்களுக்கு விசிட் அடித்துவிட்டு, கல்லூரியிலும் விடுதியிலேயே இருத்தல்தான் நல்லது எனப்பட்டதால் அவளே சுயமாய் விரும்பி பெற்றோரிடம் தன் முடிவை தெரிவிக்க,அவர்களுக்கும் கல்லூரி வேறு ஊரில் இருப்பதால் அதுவே சரியெனப்பட்டது.

ஆரண்யாWhere stories live. Discover now