விதி வசம் அவள்

339 29 35
                                    

மாணவர்கள் அனைவரும் அடுத்த தேர்வான இயற்பியல் பரீட்சைக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டிருந்தனர்.இதற்கு முன் எழுதிய தாவரவியல்-விலங்கியல் பரிட்சையில் மிகவும் எதிர்பார்த்த,பல முறை படித்த கேள்விகள் கேட்கப்பட்டமையால் அனைவரும் ஓரளவிற்கு நல்ல முறையிலேயே எழுதினர்.ஒரு மதிப்பெண் கேள்விகளும் அவ்வளவு கடினமாக இல்லை.ஆதலால் அனைவரும் மிக குஷியாக தேர்வரையிலிருந்து வெளி வந்தனர்.இந்த களிப்பில் இயற்பியல் பாடத்தின் மேல் பயம் சற்றே குறைந்து காணப்பட்டது.

பயம் குறைவதென்பது என்னவோ நல்லது தான்,ஆனால் சிலர் மிகவும் அசால்ட்டாக

"கடைசி பரிட்சை தானே, அதுவும் மெடிக்கல் கட் ஒப் கு இதிலிருந்து குறைவாகவே எடுப்பர்.கடைசி தினம் இப்பள்ளில் நன்றாக என்ஜாய் செய்துவிட்டு செல்வோம்"

என்ற மனநிலையில் இருந்தனர்.

எத்தனையாவது பரிட்சையாக இருந்தாலும் பொறுப்பாக முதல் பரீட்சைக்கு படித்த மனநிலையிலேயே படித்த மாணவர்களும் இருந்தனர்.

ஆரண்யா இதில் இரண்டுக்கும் இடையில் உள்ள வகை.

முதலில் மருத்துவபடிப்பின் மீது நாட்டம் இல்லை தான்...ஆனால் போகப்போக போட்டி மனப்பான்மையால் அவளுக்குள்ளும் சில தேவை இல்லாத எண்ணங்கள்."இந்த ஸ்கூல் லேர்ந்து போற எல்லாரும் நல்ல மெடிக்கல் காலேஜ் ல இருக்காங்க.சோ நான் மட்டும் நல்லா படிக்லேன்னா சொந்தகாரங்க எல்லாம் அம்மா அப்பா கிட்ட உன் பொண்ணு நல்லா படிக்லையா னு கேப்பாங்களே....சோ எப்டியாச்சு நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கணும்."

இரண்டும்கெட்டான் வயதில் தோன்றும் சில எண்ணங்கள் வாழ்வை முற்றிலும் மாற்றும் வலிமை உடையவை.இவள் எண்ணம் இவளை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ?

சரி, நாம் ஆரண்யாவின் இயற்பியல் தேர்வுக்கான ஆயத்தங்களை பார்ப்போம்.

பயோலஜி தேர்வு பற்றியே யோசித்து அரை நாள் வீணானதால் இன்னும் இரண்டு நாட்களே இருந்தன கடைசி தேர்வுக்கு.

ஆரண்யாWhere stories live. Discover now