வருத்தம் கலந்த வணக்கம்

300 19 18
                                    

இப்பதிவை படிக்க வந்துள்ள அனைவருக்கும் எமது தாழ்மையான வருத்தம் கலந்த வணக்கங்கள்.

ஆரண்யா எனும் நாயகியை கதாப்பாத்திரமாக்கி மருத்துவ கதைக்களம் அமைத்து நன்முறையில் கரை சேர்க்கும் ஆசையில் ஆரம்பித்த கதை தான் 'ஆரண்யா'.

ஆனால் எனக்கு இக்கதையை யோசிக்க மற்றும் எழுத நிறைய நேரம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு எனக்கு பற்றாக்குறை அதுவே.பொதுவாகவே மருத்துவ மாணவர்களை ஆசுவாசப்படுத்தவிடாமல் ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருப்பர். இப்பொழுது கடந்த ஒரு மாதமாக எனக்கு சமயமே கிடைப்பதில்லை.கிடைத்தாலும் சோர்வு மிகுதியால் யோசிக்கவோ எழுதவோ முடிவதில்லை.இங்கே எழுத்தாளர்கள் பதிவிடும் பதிவுகளை படித்தே போக்கிவிடுவேன்.எனக்கு படிப்பதே மிகவும் பிடிக்கும்😍.

எனக்கு வாட்பேடில் அறிமுகமான இவர்கள் தான் எனக்கு முன்னோடிகள்😇

d-inkless-pen

niharikanivas

ashikmo

sankareswari97

sankaridayalan

yogamickey

ThamizhThen

thamizhmoni

creativeAfsha

இவர்களால் தான் எனக்கு தமிழில் எழுத தைரியமே வந்தது.இதே காரணத்தினால் தான் எனது முதல் படைப்பான 'Train to my marriage'உம் பாதியில் கிடப்பிலேயே உள்ளது.

அனைவரும் என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இரு கதைகளையும் முடிக்க வேண்டுமே என்பதற்காக அல்லாமல், எனது படைப்புகள் எனது சிந்தனைகளை கொண்டு எனக்கு திருப்தி அளிக்கும் வகையிலேயே முடிவுறுமாறு இருக்க வேண்டுமென எண்ணுகிறேன்.எவ்வளவு நாட்களானாலும் அனைவருக்கும் பிடித்தவாறு அடுத்த பதிவில் காண்போம் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்.

அனைவருக்கும் என் அன்புகள்...

ஆரண்யாWhere stories live. Discover now