13

1.2K 83 68
                                    

காலைக்கதிரவன் தன் மரகத மஞ்சள் நிற கரங்களை நீட்டி இவ்வுலக உயிர்களை எல்லாம் தன் இளஞ்சூட்டால் ஆரத்தழுவியிருந்த அந்த அழகான விடியற்காலைப் பொழுதில் விஷ்ணு தனதறையில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் . ஒரு சில நாட்களாக சரியான உறக்கம் இன்றி தவித்தவனுக்கு இப்பொழுதுதான் நிம்மதியான தூக்கம் கிட்டியது . 

நேற்றைய தினத்தின் இரவில் வேதாவைச்சந்தித்துவிட்டு தனதறைக்கு வந்தவன் அன்றைய தினம் தன் வாழ்வில் ஏற்பட்ட இருமாறுபட்ட முக்கியமான நிகழ்வுகளை நினைத்துப்பார்த்தான் . நினைக்கவே மலைப்பாக இருந்தது . ஒன்று தன் முன்ஜென்ம நிகழ்வினை அறிந்துகொண்டது . மற்றொன்று தன் காதலை வேதாவிடம் வெளிப்படுத்தியது . இரண்டுமே அவன் மனத்தினில் இதுநாள் வரை குழப்பத்தை விளைவித்த விஷயங்கள் . இன்றோ இவையிரண்டிற்க்குமே தக்க விடை கிட்டியதால் மனம் லேசானது போல இருந்தது . 

" எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மரகதலிங்கத்தை தேடிக்கண்டுபிடித்துவிடவேண்டும் " என எண்ணி படுக்கையில் சரிந்தான் . படுத்தவுடன் அன்றைய தின அயர்ச்சி அவனை உறக்கம் எனும் மாயா லோகத்திற்க்கு சுற்றுலா அழைத்துச்சென்றது . 

கனவுகளற்ற அற்புதமான அந்த உறக்கம் எனும் லோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தவன் திடீரென தன் மீது பொழியப்பட்ட நீரால் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தான் . அடிவயிற்றிலிருந்து கோபம் கொந்தளிக்க " வாட் த ஹெல் ... டாமிட்....இடியட் யாருடா தண்ணி ஊத்தினது" என திட்டிக்கொண்டே முகத்தில் வழிந்த நீரை தன் கைகளால் துடைத்தெறிந்துவிட்டு கண்களைத் திறந்தான் . 

தனது எதிரில் கையில் தண்ணீர் வாளியுடன் நிற்க்கும் ராமைப்பார்த்து " இடியட் என்னடா பண்ண இப்போ ? . நிம்மதியா தூங்க கூட விடாம டார்ச்சர் பண்றியே ! உருப்படுவியாடா நீ ! " என ஆத்திரத்தில் கத்தினான் . 

" டேய் கத்தாதடா ! நான் உன்கிட்ட நேத்து என்ன சொன்னேன் ? இன்னைக்கு மார்னிங் ஒரு இடத்துக்கு போறோம் . சீக்கிரம் ரெடியாகுன்னு சொன்னேனா இல்லையா ? அதான் உன்னை எழுப்ப வந்தேன் " என கூறிய ராமை பார்த்து முறைத்துக்கொண்டே " அதுக்கு இப்படியா தண்ணி ஊத்துவ ! சாதாரணமா எழுப்பியிருக்கலாம்ல " என்றான் விஷ்ணு . 

அது மட்டும் ரகசியம்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon