தனது மொபைலுக்கு கால் வர அதை எடுத்து பார்த்தவள்
"ஹாய் சந்துரு.எப்படி இருக்கீங்க.அனுசியா எப்படி இருக்கா.அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க.அப்புறம் நம்ம சாதனாக்கு கல்யாணம் ஆகிடுச்சா.நிச்சயதார்த்தம்தான் அவசரமா வெச்சிட்டீங்க.கல்யாணத்துக்காச்சும் சொல்வீங்களாப்பா"என்றவளை
"யம்மா வாயாடி.போதும் ஒரு ஹாய் கு அப்புறமா இவ்வளவு கேள்வியா.நீ கேட்ட கேள்விகள் எல்லாத்துக்கும் பதில் சொல்லவே 2 நாள் வேணுமே"என்று கலாய்த்தவனை
"போதும் டாக்டர் சார்.கேட்ட கேள்விக்கு இப்போ ஒன்னொன்னா பதில் சொல்லுங்க"என்றளை
"எல்லோரும் சுகம் .சோ 75 வீதமான கேள்விக்கு பதில் சொல்லிட்டேன்.சாதனா,ப்ரசாத் வெடிங்க்கு கண்டிப்பா நீ வர்ர.நிச்சயதார்த்தம் நடந்தது பெரிய ஸ்டோரி.அது இன்னொரு நாளைக்கு கால் பண்ணி சொல்ரேன்பா.நான் இப்போ எதுக்கு கால் பண்ணேன்னா எங்க வேலை செய்ற ஹாஸ்பிடல்ல இன்னைக்கு ஒரு இரத்த தானம் ஒண்ணு ஏற்பாடு செஞ்சிருக்கு.நீயும் உன் ப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிர்ரியா"என்றவனை
"கண்டிப்பாடா.அப்புறம் அனு கூடவா இருக்கா?"என்று நித்யா கேட்க
"ஆமா அந்த குரங்கு இங்கதான் அதோட ப்ரெண்ட்ஸ் கொஞ்ச பேரோட ஊர்ல இருந்து வந்திருக்கு "என்று கலாய்த்த சந்துருவை
"மவனே இரு வந்து அவகிட்ட உன்ன போட்டு குடுக்குறேன்"என்று பயமுறுத்த
"அம்மா தாயே ..நல்லா இருக்குற குடும்பத்துல குழப்பத்த ஏற்படுத்திடாதம்மா.இப்பதான் கொஞ்சம் எல்லாமே க்ளியர் ஆகி இருக்கு.இதுல நீ வேறயா"என்றான்.
கடைசியில் இருவரும் பேசிவிட்டு காலை கட்செய்ய நித்யா வாட்சப்பில் உள்ள தன் கல்லூரி தோழிகள் எல்லோரும் இருக்கின்ற க்ரூப்பிற்கு மெசேஜ் செய்து விட்டு அவளும் அந்த ஹாஸ்பிடல் செல்ல தயாரானாள்.
அனுவும் ,நித்யாவும் ஒரே காலேஜில் படித்தனர்.ஆனால் வேறு வேறு சப்ஜக்ட்ஸ்.அனுவின் அறிமுகம் மூலம் நித்யாவுக்கு சந்துரு ஒரு நல்ல நண்பனாக அவ்வப்போது பேசுவான்.
YOU ARE READING
சில்லெனெ தீண்டும் மாயவிழி
General FictionGeneral Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ...