இன்று .............................
காலையில் விடிந்ததும் வருணுக்கு முன் உறக்கத்தில் இருந்து விழித்த நித்யா தன் கணவன் உறங்குவதை பார்த்து புன் முறுவல் பூத்தாலும் அவளால் எதுவும் சரியாக யோசிக்க முடியவில்லை.தன் வாழ்கையில் மட்டும் ஏன் இவ்வளவு twist and turns என்று அவள் யோசிக்க யோசிக்க அவளுக்கு காலையிலேயே தலை வலிக்க ஆரம்பித்தது.இவள் எழுந்து குளித்து முடித்துவிட்டு தூங்கும் வருணை எழுப்பாமல் மெதுவாக கதவை திறந்து வெளியில் செல்ல கிட்சனில் பர்வதமும் அதிதியும் காலை உணவை சமைத்துக்கொண்டிருக்க சத்தமிடாமல் இவர்கள் பின்னாள் வந்தவளை அதிதி
"என்னடி பன்னி,,,சாரி சாரி அண்ணி"என்று கூற பர்வதம் கையில் இருந்த கரண்டியாலேயே அதிதிக்கு அடித்தார்.உடனே
"அதானே உனக்கு உன் மருமகள ஏதும் சொன்னா பிடிக்காதே"என்றவளை நித்யா
"ஆமா அதிதி அருணும் வசுவும் எங்க.ஆளவே காணோம்.காரியம்லாம் முடிச்சிட்டு இன்னைக்கு வரேன்னு சொன்னாங்கலே"என்றவளை அதிதி
"அட உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காப்பா.நான் இருந்தேன் உனக்கு கல்யாணத்துக்கு அப்புறமா பர்ஸ்ட் நைட் ஞாபகத்துல எல்லாமே மறந்திருக்கும்னு"என்று நித்யாக்கு மட்டும் கேட்கும் விதமாக கூற நித்யாவோ அவளை முறைத்து சைகையால் வாயை முடு என்றால்.
எல்லோரும் காலை உணவுக்காக டைனிங்க் டேபிளில் இருக்க அருணும் வசுந்ராவும் வந்து சேர்ந்தனர்.
வந்ததும் வராததுமாக அருண்
"ஓய் நித்ஸ்..எங்க நம்ம மாப்பு.ஆளவே கானோம்.நல்லா தூங்குறானோ"என்றவனை
"ஏன் சார்,உங்க கல்யாணத்து அன்னைக்கு என்ன பண்ணீங்க"என்றவளை அவன்
"ஆமா நான் என்ன பண்ணேன்.நான் காலைலயே எழுந்துட்டேன்பா"என்று கூற அவளோ பர்வதம் கிட்சனுக்குள் உணவு எடுக்க சென்றதை உறுதிப்படுத்திகொண்டு மெதுவாக அவனுக்கும் வசுந்ராக்கும் மட்டுமே கேட்கும் விதமாக
YOU ARE READING
சில்லெனெ தீண்டும் மாயவிழி
General FictionGeneral Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ...