வசுந்த்ராவின் கணவன் கோவத்துடன் சென்றதும் கீழே தரையில் ஆற்றாமை மற்றும் அவமானத்துடன் அமர்ந்திருந்தவளை அருண் எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் இருக்க அவன்"என்னங்க என்னாச்சு? ஏன் அவரு அப்படி பேசிட்டு போறாரு?"என்றவனை அவள்
"அருண் ,ஸ்டே இன் யுவர் லிமிட்.என் பெர்சனல் விசயங்கள்ள தலையிட வேணாம்"என்றதும் அவனுக்கு எங்கிருந்துதான் கோவம் வந்ததோ தெரியவில்லை கோவத்தில் அவன் முன் இருந்த கண்ணாடி மேசையில் தன் கையால் அடிக்க அது உடைந்து அவன் கரத்தை கிழித்து இரத்தம் ஓடியது.இதை கண்ட வசுந்த்ரா
"போதும் அருண்,இந்த சீன் எல்லாம் இங்க வேணாம்.என் பெர்சனல் பத்தி நான் எதுவுமே பேசுரதா இல்ல.போய் டாக்டர்கிட்ட கைய காட்டுங்க"என்றவளை அருண் தன் கையில் காயம் பட்டதால் வந்த வலியை விட அவளின் அலட்சியம் அவனை உயிரோடு கொல்ல செய்தது.கோவத்துடன் வீட்டை விட்டு வெளியேற கதவை திறந்தவன் மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை படாறென்று கதவை சாத்திவிட்டு அவள் அருகில் வந்தவனை அவள் என்னவென்பது போல பார்க்க,அவனோ அவள் அணிந்திருந்த சுடிதாரின் வலது கைப்பாக்கத்தை பிய்த்து எடுத்தான்.ஆடையின்றி இருந்த அவளின் கையை பார்த்தவனுக்கு கண்களை விட்டு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.அவளோ அவளின் ஆடையை கிழித்த கோவத்துடனும் அவளின் ரகசியங்கள் வெளிப்பட்டு விட்டதே என்ற அவமானத்துடனும் அருணை
"என்ன பண்றீங்க அருண்"என்றவளை அருண் ஓங்கி அறைந்தான்.
"என்னடி இது.இத மறைக்கத்தானா எப்ப பார்த்தாலும் முழுக்கை போட்டுக்கிட்டு திரிஞ்ச.படிச்ச பொண்ணுதானே நீ.அந்த நாய் உன் கையில ஒரு இடம் இல்லாம சூடு வெச்சிருக்கான்.நீ என்ன பண்ணிகிட்டு இருந்தே.போலீஸ்கிட்ட போகவேண்டியதுதானே"என்றவனை
"போலீஸ்கிட்ட போய்....சொல்லு அருண்..போலீஸ்கிட்ட போய் என்ன செய்ய?என்ன கொடுமைபடுத்தினாலும் எனக்கு இருந்த ஒரே உறவு அவரு மட்டும்தான்.ஆசிரமத்துல வளர்ந்த அனாதைக்கு கிடைச்ச ஒரே உறவு அவருதான்.அதுவும் கடைசில என்னால செய்ய முடியாம போன ஒரு விசயத்தாலதான் அவர விட்டு ...சாரி அவன விட்டு விலகவேண்டியதா போச்சு" என்றவளை அருண்
YOU ARE READING
சில்லெனெ தீண்டும் மாயவிழி
General FictionGeneral Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ...