2

2.5K 80 84
                                    

சூரியன் வாக்கிங் ஜாகிங் எல்லாம் முடித்து தன் வேலையை செவ்வனே செய்ய தொடங்கி இருந்தான்.... மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர்...

" அத்தான்...அத்தான்..." தலையணையை அணைத்து கொஞ்சி கொண்டு இருந்தாள் நம் நாயகி

" எரும மணி என்ன ஆகுது .. இன்னும் என்னடி தூக்கம் உனக்கு.. தினம் இதே வேலையா போச்சு.. பொண்ணா இலட்சனமா என்னிக்காச்சு காலைல எழுந்து குளிச்சு இருக்கியா... தடி மாடு " 

பாதி கண்ணை திறந்து பார்த்தவள் அத்தான் மறைந்து காளி போல் எதிரே அவள் அம்மா நிற்க, தலையை சொறிந்து மீண்டும் தலையணையில் புகம் புதைத்தாள். அவள் அம்மா ஏதோ போனில் பேசுவது போல

" ச்ச.. கனவா.. அதான பாத்தேன், அவராச்சு அப்படி நடக்கறதாச்சு " என மனதில் முணங்கியவள் , தன் அன்னையிடம் கட்டிலில் உருண்டு கொண்டே

" ஏம்மா இப்படி என்ன திட்ற.. உனக்கு கொஞ்சமாச்சு பாசம் இருக்கா... பொண்ணு கல்யாணம் ஆகி போக போறாளே, இருக்கற வரை எப்பிடியோ ஜாலியா இருக்கட்டும்னு .. அப்புறம் ரொம்ப பீல பண்ணுவ சொல்லிட்டேன் "

" அடியே.. நேத்து நீதானடி சொன்ன அம்மா சீக்கிரம் எழுப்பு காலையில எக்ஸர்ஸை பண்ணும் .. வெயிட் ஏறுது.. இல்லனா கல்யாணத்துல பூசனிக்கா மாறி இருப்பன்னு.. "

" ஓஓஓஓ அப்படியா சொன்னேன். ஹீஹீ மறந்து போச்சு மம்மி.. " என அசடு வழிந்தாள்

" இருக்கும்டி உனக்கு.. எனக்கென்ன வந்துச்சு எப்பிடியோ போ.. எனக்கு வேலை இருக்கு.. " என்று அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

தன் மொபைலை தேடி எடுத்தவள் வாட்சப்பை திறந்து பார்த்தாள்.. நேற்று அனுப்பிய குட் நைட் மெஸேஜ் இன்னும் பார்க்கவே இல்லை அவன்.. இழுத்து பெருமூச்சை விட்டவள்

" குட் மார்னிங் அத்தான் 😘 " என அனுப்பி விட்டு மீண்டும் தலையணையோடு ரொமான்ஸ் செய்ய போய் விட்டாள்.

தூங்கி கொண்டு இருந்தவள் அவனுக்கான மெஸெஜ் டோனை கேட்டு பரபரப்பாக எடுத்து பார்த்தாள்

" குட் மார்னிங் பேபி 😘😘😘"  வாய் வலிக்கும் அளவு இதழை விரித்து சிரித்தவள்

" அத்தான் நேத்து செம கனவு.. உங்கள நான் பாக்க நேர்ல வந்தனா.. என்ன பாத்த  உடனே நீங்க அப்பிடியே கட்டிப்பிடுச்சுக்கிட்டீங்க "

" பாரேன்.. செம தான்.. ஆனா பேபி நேர்ல ஆபிசுக்கு வந்துடாத. இங்க எப்பிடி இருக்குமோ அப்போ.. டென்சன்ல திட்டினாலும் திட்டிருவேன்.. "

முகம் சுருங்கியவள் " ஹான் ஹான்.. அப்பிடியே வந்துட்டாளும், பக்கத்துல இருக்கீங்க பாருங்க .. மிஸ் யூ அத்தான் "

" பேபி இன்னும் 2 மாசம் தான்டி, அப்புறம் எப்பவும் என் பக்கத்துல தான இருக்க போற "

" ம்ம்ம்.. காத்துட்டு இருக்கேன் அத்தான்.. "

" டைம் ஆச்சு டி.. கிளம்பனும் ஆபிசுக்கு .. நைட் கால் பண்றேன் என்ன.. பை "

_____ ×××× ______×××____×××_____

இதாங்க நம்ம ஹீரோ ஹீரோயின், இவங்களுக்குள்ள நடக்குற குட்டி குட்டி சீன்ஸ் தான் இங்க பாக்க போறீங்க.. இது ரீல் இல்ல ரியல் 😝

என்னை களவாடிய கள்வாWhere stories live. Discover now