3

2K 74 41
                                    

நிலா வீதி உலா வரும் நேரம் ஆயிற்று , அவனிடமிருந்து மட்டும் செய்தி ஒன்றும் வந்தபாடில்லை.

வேலை அதிகம் போலும் என்று தனக்கு தானே சமாதனம் சொல்லி கொண்டே இங்கும்  அங்கும் கால்கள் நில்லாமல் அலைந்து கொண்டு இருந்தாள் அவள்.

நேரம் சுருங்க சுருங்க இவள் முகமும் சுருங்கி கொண்டே போனது. மாடியில் வானத்தை அளந்தவள் சந்திரனிடம் மல்லுக்கு நின்றாள் " அவர் இல்லாமல் நீ மட்டும் வந்து ஏன் பல்ல காட்ற..😤 "

"அவர கூட்டிட்டு வந்தா வா இல்ல அப்பிடியே ஓடி போ.. " அவள் கத்தியதில் பயந்து போனானோ சந்திரன் என்னவோ, மேகங்களிடையே ஒளிந்து கொண்டான்.

அவனும் மறைய கடுப்பானவள் கைபேசியை கொண்டு தன்னவனுக்கு அழைப்பு விடுத்தாள். அது அணைத்து வைக்கப்பட்டு உள்ளது என தெரிய இதயத்தில் பாரம் கூடியது.

"பிளைட்ல  இருக்காரு போல, ஆனா ஏன் சொல்லவே இல்லை" கண்களில் நீர் எட்டி பார்த்தது. எப்பொழுதும் கிளம்பும் போதும் வந்த பிறகும் ஒரு செய்தி அனுப்பி விடுவான் மறக்காமல். இன்று அதுவும் இல்லை என்றவுடன் சோர்ந்து போனாள்.

" பாப்பா சாப்பிடலாம் வா.. " அப்பா அழைத்த குரல் கேட்டு கீழே சென்றாள். "எனக்கு பசிக்கல, நான் தூங்க போறேன்.. எழுப்பாதீங்க " சொல்லி விட்டு படுக்கையில் சென்று விழுந்தாள்.

ஏன் அழுகிறோம் என்றே புரியாமல் அழுது தீர்த்தாள்.
" என் மேல கோபமா இருக்குமோ.. அவர் வேலைய வேற சக்களத்தின்னு கலாச்சு அனுப்பிட்டோமே.. "

" அப்படி தான் இருக்கும். இல்லனா இப்படி எதுவும் சொல்லாம போக மாட்டாரே.. " தனக்கு தானே உள்ளே புலம்பியவள் கண்களில் மட்டும் நீர் அமுத சுரபி போல் வடிந்து கொண்டே இருந்தது.

மணி 11 என காட்டியது, மீண்டும் முயற்சித்தாள்.. " ஹலோ.. பேபி " அவன் குரல் கேட்டவுடன் புரிந்து போனது கோபம் எல்லாம் ஒன்றும் இல்லை என. உடனே இவளுக்கு கோபம் தொற்றி கொண்டது.

" நல்லா தான் பேசுறாரு.. அப்புறம் ஒரு மெஸேஜ் அனுப்ப என்னவாம்" உள்ளுக்குள் குமைந்தாள்.

" இப்போ தான் பேபி வந்தேன். வீட்டுக்கு போயிட்டு பேசுறேன் "

கடினப்பட்டு வந்த பெரூமூச்சை உள்ளிழுத்தவள் சரி என்று அழைப்பை துண்டித்தாள்.

" இப்ப பேசினா கண்டிப்பா நல்லா பேச மாட்டேன்.. பேசாம போய் தூங்குவோம் "

" நீங்க ரெஸ்ட் எடுங்க நாளைக்கு பேசலாம். குட் நைட் " மெஸேஜ் அனுப்பி விட்டு காத்திருந்தாள்.

" ஏன். வெயிட் பண்ணலாம் ல. " அவனிடமிருந்து பதில் வந்தது.

அந்த பதிலில் தவிப்பை உணர்ந்தாளோ என்னவோ சரி என்று விட்டு காத்திருந்தாள்.

" பேபி.. இப்போதான் நடந்து போய்ட்டு இருக்கேன்.. " மூச்சிரைப்புடன் பேசினான்

" சாப்டீங்களா.. "

" இல்ல வாங்கிட்டு வந்தேன். போய் தான் சாப்பிடனும்"

" ஏன் சாப்பிட்டு கூப்பிடலாம் ல.. "

" இல்ல நீ தூங்கிருவியோன்னு தான் கூப்டேன் "
அவனின் தவிப்பு புரிந்தது. இருந்த கொஞ்சம் நஞ்சம் ஆற்றாமையும் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது..

" இல்ல முழிச்சிட்டு தான் இருக்கேன். பொறுமையா சாப்டு வாங்க "

" ஓகே பேபி "

சிறு புன்னகையுடன் சமையல் அறை நோக்கி சென்றாள் தன் வயிற்றையும் நிரப்ப... 😉

என்னை களவாடிய கள்வாDonde viven las historias. Descúbrelo ahora