!! 1 !!

195 10 9
                                    

மதுரை கூடல்நகர் கஸ்டம்ஸ் கோட்டர்ஸ் ,

அந்த அதி காலை வேலை , ராஜலக்ஷ்மி வாசலை தெளித்து கோலம் போட்டுவிட்டு அடுப்படி சென்று காலை உணவை செய்யும் வேளையில் இறங்க அப்போது தான் சந்திரன் அங்கே வந்து ராஜி டீ எடுத்துட்டு வா என செய்தித்தாள் எடுத்து பாடிக்க ஆரம்பித்தார்

சந்திரன் – மத்திய அரசு ஊழியர்

ராஜலக்ஷ்மி - பிரைவேட் ஸ்கூல் பிரின்சிபால்

இருவரின் செல்வங்கள் தான் இனியா இனியன் ,

பெரியவன் இனியன் . காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறான் , இனியா இப்போ தான் பிளஸ் 2 .

நாள் வருக்கும் சமையல் செய்து அதை டிபன் பாக்சில் கட்டி வைத்து கணவருக்கு அவர் கேட்ட டீயே குடுக்க வர அப்போதான் சந்திரன் செல் போன் அலறியது

அதை எடுத்து யாரு என்று பார்க்க ஏதோ புதியே எண்ணில் இருக்க யாரா இருக்கும் என யோசித்த படி அவர் போனை எடுத்து பேச ஆரம்பித்தார் ..

சொல்லுங்க மாமா எப்படி இருக்கிங்க ,

..............

அப்படியா சரிங்க மாமா நான் ராஜி கிட்ட பேசிட்டு சொல்லுறேன் உங்களுக்கு என சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தார்.

அது வரை அமைதியாக நின்று சந்திரன் பேசுவதை கேட்டுகிட்டு இருந்த ராஜி இப்போ, என்னவாம் உங்க மாமாக்கு என்னைக்கும் இல்லாம இப்போ போன் எல்லாம் பண்ணுறாங்க என கேட்க

அதான் ராஜி எனக்கும் புரியல இவ்வளோ வருஷம் கழிச்சு நமக்கு போன் பண்ணி ஊர்க்கு வா சொல்லுறாரு

சரிங்க நீங்க என்ன முடிவு பண்ண போறீங்க ஊருக்கு போறதா இல்ல ?

" போலாம் ராஜி என்ன விஷயம் போய் பார்ப்போம் அது மட்டும் இல்லாம அங்க நம்ம பூர்விக நிலம் எல்லா கிடக்கே அது எல்லாம் விற்க..."

வேண்டாம்ங்க அது எல்லாம் விற்க வேண்டாம், அப்படியே இருக்கட்டும் உங்க சர்வீஸ் முடிஞ்சதுன்ன நாம சொந்த ஊருக்கே போயடலாம்ல அதுக்கு சொல்லுறேன் என ராஜி சொல்ல

ராஜியின் யோசனை சந்திரனுக்கு சரின்னு பட்டது ,சரி ராஜி நாம அங்கே போயிட்டு , நம்ம இடத்த என்ன பண்ணலாம் பார்க்கலாம் ,இப்போ நீ போய் மோதல ஒரு வராத்தக்கு தேவையான டிரஸ் எல்லாம் பாக் பண்ணிட்டு பசங்க எழுப்பி விடு.. இப்போ கிளம்பினா தான் நேரத்துக்கு போய் ஊர் சேர முடியும் என அவர் சொல்லி முடிக்க

இனியன் – இனியா எழுந்து வந்து விட்டார்கள் , இவர்கள் பேசுவதை கேட்டு , அப்பா –அம்மா நாம வெகேஷன் எங்கயும் போறோமா எதுக்கு பேக் பண்ணனும் என இனியன் கேட்க

" ஆமா இனியன் , நாம நம்ம ஊருக்கு தான் போறோம் , மிச்சத அப்புறம் பேசலாம் நீங்க ரெண்டும் போய் உங்களுக்கு என்ன வேணுமோ எல்லா எடுத்து வையுங்க அப்புறம் அங்கே வந்து அது இல்ல இது இல்லைன்னு என்கிட்ட சொல்ல கூடாது ,என புரிஞ்சதா போங்க என தன் பிள்ளைகளுக்கு ராஜி வேலை கொடுத்து அனுப்பிவைத்து விட்டு , சந்திரன் இடம் , எங்க நீங்க போய் நான் சொல்லுற திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க வழில எங்கயும் நிறுத்த வேண்டாம் கார , என சந்திரனையும் கடைக்கு அனுப்பிவைத்துவிட்டு ஊருக்கு போவதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆராம்பித்தார் , ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டு பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் சென்று பார்க்க

அங்கே அவர்களும் எடுத்து வைத்துவிட்டு ஹப்பாடா என அமர்ந்து இருந்தார்கள் , அதை பார்த்து ராஜி... ஏய் என்ன இது.. ஒரு வாரம் தங்குறதுக்காக துணி எடுத்து வைக்க சொன்னா இப்பிடி ஒரு வருசத்துக்கு வேண்டியது எடுத்து வச்சு இருக்கீங்க... என அவர் கேலி செய்யே [ அவருக்கு தெரியவில்லை இனி அவர்கள் எப்போதும் இங்கே திரும்பி வரப்போவது இல்லை என்று .....................]

யார் அதுWhere stories live. Discover now