!! 2 !!

155 11 75
                                    


மாயனூர் ஊரு எங்கு திரும்பினாலும் விவசாயம் தாங்க இங்க இருக்கிற மக்களுக்கு வாழ்வு ஆதாரமே என்னதான் சிமெண்ட் கம்பெனி அது இதுன்னு இருந்தாலும் விவசாயம் தாங்க இந்த ஊர் மக்கள் நம்பி இருப்பது , கரூர் பக்கம் இருக்கிற ஒரு ஊரு தான் இந்த மாயனூர் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது. மாயனூர் என்கிற சொல் " மையம் " என்ற சொல் இருந்து தான் வந்தது இப்போ பேச்சு வழக்குல இப்போ மாயனூர் என மாறிடுச்சு . இங்கே செல்லாண்டியம்மன் கோவில் ரொம்ப பேமஸ் , மிச்சத கதைல பார்த்துட்டே வரலாம் மக்களே ]

எல்லாம் எடுத்து வச்சாச்சா என ராஜி ஒரு முறை எல்லாம் சரி பார்த்தார் , அப்போது தான் அவருக்கு தான் ஞாபகம் வந்தது சந்திரன் இன்னும் வீடு திரும்ப வில்லை என்று .. எங்க போனாரு இந்த மனுஷன் , என யோசித்த படி ஹாலுக்கு வர அப்போது தன் எல்லாம் வாங்கி கொண்டு வந்தார் சந்திரன் அவரை பார்த்து ராஜி

" ஏங்க எங்க போய் இருந்திங்க இவ்வளோ நேரமா , "

" லீவ் சொல்ல வேணாமா ராஜி அதான் ஆபீஸ்ல பேசிட்டு அப்படியே நீ சொன்னது எல்லாம் வாங்கிட்டு வரேன் அதான் கொஞ்சம் லேட் ஆகிருச்சு ,என சந்திரன் சொல்ல"

" சரி சரி போய் கிளம்புங்க நான் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன் வேற ஏதும் வேணுமான்னு பார்த்து சொல்லுங்க என சொல்லிவிட்டு அடுப்படிக்கு சென்று செய்து வைத்து இருந்த உணவை எல்லாம் ஒரு பேகில் எடுத்து கொண்டு , கேஸ் ரேகுலேடர் , லைட் எல்லாம் நிறுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு கிளம்பினார்கள் .

போகும் வழியில் எங்கும் காரை நிறுத்த வேண்டாம் என்று ராஜி சொல்லிவிட , சந்திரனுக்கும் அதுதான் சரி என பட்டது ,

ஊரில் தங்களுக்காக என்ன காத்து கொண்டு இருக்கிறது என தெரியாமல் சந்தோசம் குதுக்காகலமாக மாயனூர் எல்லையே நெருங்க என்றைக்கும் இல்லாமல் சந்திரனின் மனதில் ஒரே படபடப்பு , ஆனால் ஏன் என்று தான் அவருக்கு தெரியவில்லை ஒரு வேலை இத்தனை நாள் இல்லாமல் ஊரே நெருங்க நெருங்க அவளின் ஞாபகம் வருவதாலா ??

யார் அதுWhere stories live. Discover now