என் நெஞ்சம்-06

814 47 57
                                    

"யம்மா இவ்ளோ பெரிய காலேஜா...என் க்லாஸ் ரூம்கு எப்டி போறதுன்டு யார்கிட்ட கேக்றது...ரொம்ப பயமா வேற இருக்கே...இன்னும் நாலு வர்ஷதுகு எப்டிதான் இங்க குப்ப கொட்ட போறேனோ தெர்லயே...ஓ மை லோட்...இப்பவே இந்த மாதரி கண்ண கட்டினா? அதுக்கு அப்ரொம் கேக்கவா வேணும் முருகா முடியலபா"... செய்வது அறியாது அங்கும் இங்கும் பார்வையை செலுத்தியவாரு பயத்துடன் நின்று கொண்டு இருந்தாள் அனிஷா.

"ஐய்யோ ஏன் அந்த பையன்கள் என்னயே பாக்குறாங்க...ஐய்யோ ரெகிங் பண்ண தான் என் கிட்ட வாராங்களோ"...பயத்தின் காரணமாக கண்களை மூடிக் கொண்டு "காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நெடியினில் நோக்க அய்யோ அழுக அழுகயா வருதே தாக்க தா....க்..க
தடையறத் தாக்க" என கந்த சஷ்டி கவசத்தை அனிஷா முனுமுனுத்துக் கொண்டிருக்க,

"இந்த பொண்ணு ஏன் இந்த போஸ்ல தனியா நின்ணுட்டு, தனியா பொலம்பிட்டு  இருக்கா...ஓரு வேல இடம் மாறி வந்துடாளோ"... என மனதில் நினைத்துக் கொண்டு Excuse me என Rk கூற,

அனிஷாவிற்கு பயம் மேலும் அதிகரிக்க கண்களை இன்னும் அழுத்தமாக மூடிக்கொண்டு "கா..க்..க  காக்...க  கன..க  நோ...நோ..க்...க  நோ... நோ...க்க"  என வார்த்தைகள் சூனியமாய் மாற, செய்வதறியாது அதே நிலையில் நின்றிருந்தாள்.

"ஏங்க தானியா ஏன் பொலம்பிடு இருகீங்க"... என RK குரல் கொடுக்க, மெல்ல கண்களை திறந்த அனிஷா பின்புறம் திரும்பி கைகளால் சுட்டிக்காட்டி ஏதோ கூற வர  அவள் காட்டிய திசையை பார்த்தவன் "அங்க தான் யாரும் இல்லயே"... என கூற கண்களை நன்றாக விரித்து பார்த்தவள் "அப்பாடா" என நான்றாக மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டாள் அனிஷா.

என்ன என்பது போல் அவளை பார்க்க, இல்லை என தலை அசைத்து விட்டு "IT department எங்க இருக்கு"... என வினவினாள் அனிஷா.

அவளை ஒருமாதரியாக பார்த்து விட்டு "இப்டியே நேரா போய் ரைட்ல திரும்புங்க"... என RK கூறி விட்டு நகர்ந்தான்.

"அப்பா என்ன கண்ணுடா அது அப்டியே ஆள கட்டி இழுக்குது...அவ கண்ண மூடி ஏதோ முனுமுனுக்கும் போது ரொம்ப கிவ்டா இருந்தால...அவ ஏன் அப்டி பயந்து போய் நின்னா"..."நீ யேன் இப்போ அந்த பொண்ண பத்தி நெனகிற" என அவன் மனசாட்சி எட்டி பார்க "ஏன் நான் அந்த பொண்ண பத்தி நெனகனும் இது என் கரெக்டருக்கே செட் ஆகாதே"...என தன்னுள்ளே வினா எழுப்பினான் "ஏன்னா உனக்கு"... என ஏதோ அவன் மனசாட்சி பதில் கூற வர அதை அடக்கியவன் கைகளால் தலையை கோதி தன்னை சமன் படுத்திக் கொண்டு தன் நண்பர்களை தேடி சென்றான்.

ஏங்குதடி என் நெஞ்சம்Where stories live. Discover now