மீண்டும் வேண்டுமடி

998 36 1.4K
                                    

உன்னை காண காத்துகிடந்த சுகமான நொடிகள் மீண்டும் வேண்டுமடி

உன் ஒற்றை பார்வை தீண்டலுகாய் தவித்துகிடந்த தருணங்கள் மீண்டும் வேண்டுமடி

என் காதல் உரைத்து உன் பதிலுகாக காத்துகிடந்த அந்த அச்சமான மணிதுளிகளும் மீண்டும் வேண்டுமடி

உன் ஒற்றை பதிலால் இந்த உலகையே கையில் அடக்கியதாய் மகிழ்ந்த தருணம் மீண்டும் வேண்டுமடி

உன் கரம் கோர்த்து உன் விழி நோக்கிய உன்னதமான நிமிடங்கள் மீண்டும் வேண்டுமடி

என் வாகன வேகத்தில் மிரண்டு நீ என் தோள் பிடித்த தித்திப்பான மணி துளிகள் மீண்டும் வேண்டுமடி

இவைகள் யாவும் மீண்டும் கிடைத்தால் உன்னை மறுமுறை இழக்க மாட்டேனடி என் தேவதையே

என் இதயத்தின் சாரல்கள் Opowieści tętniące życiem. Odkryj je teraz