என்னை எரிக்கும் தீ

162 17 25
                                    

நான் விழும் நேரமெல்லாம் கரம் தந்தாய், துவளும் நேரமெல்லாம் தோள் தந்தாய்...

இமயத்தை தொடும் அளவு நம்பிக்கை தந்தாய், என் காதல் வலியின் மருந்தாய் உன் நட்பை அள்ளி தந்தாய்...

ஆனால் ஏனோ நம்மை பிரித்து எரிக்கிறது அருவருப்பான ஒரு தீ...

என் உயிரின் பாதியாய் நின்றவளே, உன் புன்னகையில் என்னை தொலைத்தேனே...

என்னுள் உன் இதயம் தொலைத்து என் கரம் பற்றினாய் என்று நினைத்தேன பேதை மனம் அறியாமல், உன்னை விட்டு விலகிவிடுவேன் என அறிந்தா என் கரம் பற்றி நின்றாய்...

இனியும் ஒரு பிறவி வேண்டாம் மானிடராய், ஆயுள் குறைந்தாலும் பறவையாய் பிறந்து பறந்து திரிவோம் நம் காதல் வானில்...

அப்பொழுதாவது நம்மை விட்டு வைக்குமா ஜாதி எனும் தீ...

என் இதயத்தின் சாரல்கள் Where stories live. Discover now