கதை திருட்டு

208 27 63
                                    

வாட்பேடில் பல வருடங்களாக நான் இருந்து வருகிறேன். முதலில் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே படிக்க கிடைத்த இத்தளத்தில் சிறிது சிறிதாக தமிழ் புத்தகங்களும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தன. அவற்றை பார்க்கும் போது மிகவும் குதூகலமாக இருக்கும். நிறைய உயிர் நண்பர்களை தந்ததும் இந்த வாட்பேடே.  அடுத்த அடுத்த ஆண்டுகளில் தமிழ் புத்தகங்களும் வரிசை கட்டி குவிந்தன. நிறைய பெரிய எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமையும் வாட்பேடுக்கு உண்டு.

ஆனால் சில ஆண்டுகளிலேயே வளர்ந்து அவர்களும் இத்தளத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். இன்னும் சிலர் போன இடம் தெரியவில்லை. நானும் இங்கு புத்தகம் வாசிப்பதை குறைத்து கொண்டேன். தற்போது இளம் எழுத்தாளர்கள் நிறைய பேர் இங்கு கதை எழுதி வருகின்றனர். அதை ஊக்குவிக்கும் வகையில் தான் இந்த மீம் கடையை ஆரம்பித்ததே.

கதை திருட்டு என்கிற ஆயுதம் எல்லாவற்றையும் அழித்து வருகிறது. ஆசிரியர்கள் இத்தளத்தில் இருந்து தங்கள் கதைகளை நீக்கிக்கொண்டு இருக்கின்றனர். கொடிகட்டி பறந்த வாட்பேட் தமிழை இப்போது  இப்படி பார்க்க மனம் மிகவும் வேதனை அடைகிறது.

கதை திருடும் கயவர்களை என்ன சொல்லி திட்டுவது என்றே தெரியவில்லை. அவர்கள் எல்லாம் திட்டக் கூட தகுதி இல்லாத ஈனப்பிறவிகள். ஆசிரியர்களுக்கு நான் சொல்ல ஆசைப்படுவது இதுவே

உங்கள் துயரமும் வேதனையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கதையை உருவாக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. உங்கள் கடின உழைப்பும், கனவுகளும், ஆசைகளும் அடங்கியது உங்கள் படைப்பு. அதை தற்காத்து கொள்ள உங்களால் இயன்றவற்றை செய்யுங்கள், இதனால் ஒடிந்து போகாதீர்கள். எங்கு உங்கள் கதை பாதுகாப்பாக இருக்குமோ அங்கு பதிவிடுங்கள். இங்கிருந்து செல்ல உங்களுக்கும் எவ்வளவு மனவருத்தம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம். உங்கள் அனைவருக்கும் மீம் கடை அட்மின் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து எங்கள் ஆதரவையும் தெரிவித்து கொள்கிறோம்.

வருத்தத்துடன்,
அட்மின் குழு

Screenshot eduthu kadhai thirudum erumai kalugaga intha memes.. ithaiyum screenshot eduthu anupungal avargaluku.. ithai neengal share seiyalam

 ithai neengal share seiyalam

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
வாட்பேடர்ஸ் மீம் கடைWhere stories live. Discover now