அக்கப்போரு-2

36 7 36
                                    

உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம்
என் வீட்டு பக்கம் வந்துவிடாதே
நாய்கள் வச்சிருக்கேன்
உன் பேரை வச்சித்தானே தினமும்
அதட்டி கூப்பிடுவேன்
ஹே பேய்கள் என்ற புரளியை
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்
நீ தானே என்றிருக்கிறேன்.......

அட இங்க ஏதோ பொண்ணு ஓடுதே ...

அய்யோ...... மணி 6  ஆக போகுதே ச்சா.. சீக்கிரமா காளான் பார்சல் போட சொன்னா அந்த ஆளு வேற லேட் பண்ணிட்டான்... இப்போ என்ன பண்ணுறது ... வேகமா ஓடுடி விரு....

என்ன பார்க்கறீங்க இவதான் விருஷாலி.
பாவம் இப்படி லொங்கு லொங்குனு எதுக்கு ஓடுறானு தான பாத்தீங்க... வாங்க நாமலும் அவகூட ஓடி போய் பாப்போம்...

அப்பாடா கரெக்ட் டைம்க்கு வந்தாச்சு .. அய்யோ ரிமோட் காணோமே... இந்த தங்கபிள்ளை அத எங்க போட்டா தெரியலையே.. அய்யோ நாமதான அத டிவிமேல வச்சோம்.. (அடிப்பாவி எதுக்குடி இந்த அக்கப்போரு எதுவும் முக்கியமான நிகழ்ச்சி பார்க்க போறாளோ.. இருக்கும் இருக்கும்)
ஆஆஆஆ.... இதோ போட்டாச்சு சன்மியூசிக்.. அட அட எவ்ளோ அழகா இருக்கான்ல இந்த கதிர்பய...ம்ம்ம்.. ஏய் தங்கப்பிள்ளை அங்க பாருடி செம்மல..(அடிப்பாவி இதுக்காடி இப்புடி ஓடி வந்த கிராதகி.. பெத்த புள்ள கூட உக்காந்து டிவி ஆன்கர சைட் அடிக்குற நல்லவளே..)

இந்த விருசாலி புள்ளதாங்க நம்ம ஜோக்கர் நம்பர் -5 ஊரு இராமேஸ்வரம் பாதி நேரம் கரன்டு போய் கெடக்குற ஊருல 6  மணிக்கு கரென்ட்டு போவாம இருக்கனும்னு வேண்டுவா... அதுமட்டுமில்ல இவ பண்ணுற கொடுமையை வாங்க பார்ப்போம்...

அடியே தங்கபிள்ளை ஒழுங்கா ஆ வாங்கிக்கோ இல்லைனா நிலா பூச்சான்டி உன்ன புடிச்சுட்டு போய்டும்(ஆத்தாடி ஆசையா நிலாவ காட்டி சோறு ஊட்டுற அம்மாவ பாத்து இருக்கன்டி ஆனா அந்த நிலாவ காட்டி பயமுறுத்தி ஊட்டுறியேமா... எங்கயோ போய்ட்ட நீ...)

அய்யோ போன் இங்கதான வச்சோம் எங்க போயிடுச்சு... தங்கபிள்ளைகிட்ட தான இருந்துச்சு(உன் புள்ளைக்கு வச்ச பேர நீயே மறந்துருவபோல தங்கபிள்ள தங்கபிள்ளனு கூப்புட்டு). அட மாடிலதான அவகையில இருந்துச்சு மேல போய் பாப்போம்... எங்கையும் காணோமே. கீழபோட்டு இருப்பாளோ. அய்யோ என்னடி பொதுக்குப்பத் தொட்டிக்குள்ள தூக்கிப்போட்டு இருக்க(  பராவால சேஃப் லேண்டிங் தான்போல).. ஈஈஈ தங்கப்பிள்ள இப்டிலாம் செஞ்சி அம்மாக்கு ஹாட்அட்டாக் வரவச்சுராதடி.

😁அறுவை அரசர்களும்😜 😝அரைகிறுக்கு அரசிகளும்😉Where stories live. Discover now