காலையில் ஒரு நாள்!!

478 44 21
                                    

""அய்யோ, மணி ஏழாய்டுச்சே.. எப்படி எல்லா வேலையும் முடிப்பேன்..

சமைக்க மட்டும் தான் நேரம் இருக்கும்..

வாசல் கூட தெளிக்க முடியாது..

கேரியல மதியமா குடுத்தனுப்பிடலாமா..

வேணாம்.. அது வேர ஒரு தலவலி.. இன்னிக்கு பசங்கள அவ ஆபிஸ் போகும் போது விட்டுட்டு போக வேண்டியது தான்..

.
.

அச்சோ.. காலைல பாத்திரம் விலக்கிக்கலாம்னு விட்டது வேற மறந்து போச்சே.. சே..இன்னிக்கு நேரமே சரி இல்ல..

காபி பொடி.. எங்க இருக்க..!!

நம்ம தான் தூங்கிட்டோம், இவளாச்சும் எழுப்ப கூடாது.. தினைக்கும் நம்ம காபி போட்டுட்டு வந்து வைச்சா கூட, "ஆறு மணி தான"னு திரும்ப தூங்க வேண்டியது..

எல்லாம் நேரம்...

குளிக்க கூட டைம் இல்ல.. சரி இருக்கவே இருக்கு செண்ட்டு..

அடியே காபி ரெடியா இருக்கு.. ஏந்திருடி..

"ஆஆ..மணி என்ன.."

ஹூம், பண்ணண்டு.. எந்திரி சீக்ரம்.. நீதான் இன்னிக்கு பசங்கள ஸ்கூல்ல விடணும்.. சீக்ரம்...!!

"நானா.. ஏ.. இன்னிக்கு மீட்டிங் இருக்கு..சத்தியமா முடியாது.."

அப்ப லீவு போட்டுட்டு இங்கயே இருக்கட்டும்..

"காலைலயே ஆரமிச்சிட்டியா.."

ஏஞ்ச்சு, பசங்கள எழுப்பி குளிப்ப்பாட்டு.. சீக்ரம் சீக்ரம்..

"பறக்காத.."

அப்போ நீ சமைக்றியா..

"யப்பா, விடு"

டேய் ஏந்திரிங்கடா சீக்கிரம்.. அம்மா குளிக்க வெப்பா..

டேய்.. டேய்.. எங்க போனா இவ..

ஏய்.. நீ இப்போ ஏன்டி பேப்பர எடுக்கற..

"ஹெட்லைன்ஸ் மட்டும், ப்ளீஸ்..."

அப்ப இன்னிக்கு சாப்பாடு ரசம் தான்.. சரியா..

"இரண்டு நிம்ஷத்துல ஒன்னும் ஆகாது.."

ஏன் சொல்ல-""

ரிரிரிரிங்ங்ங்ங்ங்...

அலாரம்..

கனவு கலைந்து..

மணி: காலை 6

"என்னங்க ஏந்திரிங்க" என கணவனை எழுப்பினாள்..

"ஆஆ..மணி என்ன" என்றான்..

_______________________________________

Initially thought to post it in blog.. but read the Tamil stories of Janaki_anu and Jeyavj on nonKM and was so happy.. and today Kathiripoo s words were enough for this quickie to come out at midnight!!

Thanks guys for being the change in this forum :))

Hope you all like it 😀

சிறு கதைகள்..Where stories live. Discover now